பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மாமல்லன் சிம்சோன் கிறேன். எனது தெருக்களில் மக்கள் பேசுகிருர்கள் அல்லவா? அவர்கள் என்னிடம் இணையில்லா வலிமையைக் காணினும், என்னில் அவர்கள் அறிவொளியைக் காணவில்லை அல்லவா? எளிய மாந்தனுக்குரியஅறிவுகூட இல்லாமல் போய்விட்டதே! என் அறிவு குறைந்தது என் வலிமைக்கு இணையாக இருந் திருக்க வேண்டும். ஆனல் அது தவருன நிலையில் அமைந்த தால் அது என்னே வழிதவறச் செய்தது. இப்படிச் சம அளவு வலிவும், அறிவும் அமையாததற்கு நானில்லை, கடவுளே குற்றவாளி. குழு ஆள்: இறை முறையில் குற்றம் கானதே. மிகச் சிறந்த அறிவர்கள்கூடத் தவறிழைத்திருக்கிரு.ர்கள். தீய பெண்களால் வஞ்சிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் தவறு செய் திருக்கிருர்கள். எனவே உன் நிலையை நினைந்து சோர்ந்து போகாதே. ஏற்கெனவே துயர்ச்சுமையால் நீ சோர்ந்துபோய் இருக்கிருய். உண்மையைச் சொன்னல், அழகிலும் அரும் பண்பிலும் சிறந்த பெண்கள் உன்னினத்தில் இருக்கும்போது, நீ ஏன் பெலித்திய பெண்களே மணந்துகொண்டாய் என்று மக்கள் வியப்பில் வினவுவதை நான் அடிக்கடி கேட்டிருக் கிறேன். அழகும் பண்புமிக்க பெண்களை உன் நாட்டிலே உன்னல் கண்டிருக்க முடியும். பின் ஏன் இந்தப் பெலித்திய பெண்களை மணந்தாய்? கிம்சோன்: நான் கண்ட முதற் பெண் திம்னதாவிலிருந் தாள். அவள் என்னைக் கவர்ந்தாள். அவள் எம் இனத்தைச் சேர்ந்தவள் அல்லள் என்பதால் என் பெற்ருேர்கள் அவளை நான் தேர்ந்தெடுத்ததை விரும்பவில்லை. ஆனல் நான் அவளைத் திருமணம் செய்துகொள்ள நினைத்தது கடவுளின் துரண்டுதல் என்பதை என் பெற்ருேர்கள் அறியவில்லை. நான் அந்தப் பெண்ணை மணப்பதைக் கடவுள் விரும்புகிருர் என்பதை என் உள்ளுணர்வின்மூலம் அறிந்துகொண்டேன். எனவே அவளை மணந்தேன். பெலித்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதின்மூலம் இசுரவேலர்களை பெலித்தியர்களிடமிருந்து விடுவிக்க முடியும் என நினைத் தேன். இவ்வாறு நான் எப்பணிக்காக கடவுளால் தெரிந்து