பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 、5 ● கொள்ளப் பட்டேனே அதைச் செய்யலாம் என்று எண்ணி னேன். அதை அவள் பொய்ப்பித்தாள். எனவே நான் இரண்டாவது ஒரு பெவித்திய பெண்ணை மணந்தேன். அவளை மணந்தது மடமையென்றும், அவளை மணக்காமல் இருந் திருக்கக் கூடாதா? என்று எண்ணுவதும் காலம் கடந்த ஒன்ருகும். பெலித்தியர்கள் நாட்டில் சோரேக்குப் பள்ளத் தாக்கில் தீலியாளேக் கண்டேன். அவள் ஒரு வஞ்சகப் பாம்பு. அவள் என்னைத் தந்திர வலையில் வீழ்த்தி விட்டாள். இசுர வேலர்களை விடுவிப்பதே எனது இத்திருமணத்தின் நோக்க மாக இருந்ததால் இதனை ஒழுங்கானது என்றே கருதினேன். இசுரவேலர்களை அடிமைப் பிடியிலிருந்து விடுவிப்பதே எனது இறுதி நோக்கமாக இருந்தது. இன்றைய என் இன்ன்ல் களுக்குத் தீலியாள் முழுமுதற் காரணமல்லள் எனது மடமையே முதல் காரணம். அவளது மாய்மாலத்தில் மயங்கி என் வலிமையின் கமுக்கத்தை அவளிடம் சொல்லிவிட்டேன். அது எனது மடமையின் முதலீடு; அதனால் இன்று இன்னலுறு கிறேன். குழு ஆள்: இசுரவேலர்களின் எதிரிகளாகிய பெலித்தியர் களை எதிர்க்க நீ வகை தேடியது தவருகாது. அதற்கு நான் சான்று பகருவேன். ஆனல் இன்றுகூட இசுரவேல் மக்கள் பெலித்தியர்களின் அடிமைத்தளையில் இருக்கிருர்களே. சிம்சோன்: அவர்கள் இன்னும் அடிமைத்தளையிலிருந்தால் அது எனது தவருகாது. அவர்களின் ஆளுநர் அவ்வினத் தலைவர்களின் தவருகும். அவர்கள் என் இறைபணியை நன்றியோடு ஏற்றுக் கொண்டதில்லை. அப்பணியை நான் தனி மாந்தனகவே செய்தேன். கடவுளே அப்படிச் செய்ய செய்தார். என் ஆய்வினைப் பின்பற்றி விடுதலையை மதித் திருந்தால், அதை அவர்கள் பெற்றிருக்க முடியும். நான் என் செயல்களைப் புகழவில்லை. அந்தச்:செயல்களே செய்பவனின் புகழ் பரப்பும். ஆல்ை பெலித்தியரின் திடீர் தாக்குதலைத் தாங்க எத்தாம் ஊர் கன்மலையில் நான் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது பெலித்தியர்கள் என்னைத் தேடி யூதேயா நாட்டுக்குள் நுழையும் வரை, என் செயல்களுக்கு