பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மாமல்லன் சிம்சோன் இசுரவேல் மக்கள் எவ்வகை முதன்மையும் கொடுக்கவில்லை. அப்போதும் நான் தப்பியோட முனையாமல், எதிரிகளை எங்கே எப்படித் தாக்கினல் இசுரவேலர்கள் நன்மை பெறு வார்கள் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். யூதேயா மக்கள் எதிரிகளின் தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் எல்லைகளைக் காக்கவும், என்னைக் கயிற்றினல் கட்ட முற்பட்டபோது, யூதேய மக்கள் எனக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கக்கூடாது என்ற நிபந்தனை யோடு, மனமுவந்து அவர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்ய ஒப்பினேன். அப்போது அவர்கள் என்னைக் கட்டி பெவித்தியர் கைகளுக்கு ஒப்புவித்தனர். பெலித்தியர்களோ என்னைத் தங்கள் இரையாகக் கொள்வதில் மிகவும் ஆர்வ முடன் இருந்தனர். அவர்கள் என்னை நெருங்கும்போது கட்ட பட்ட கயிறுகள், நெருப்புப் பட்ட நூல்போல் தெறிபட்டுப் போயின. பெலித்தியரின் பெருந்திரளைப் படைக்கலன் எதுவு மின்றிக் கையில் கிடைத்ததைக் கொண்டு தாக்கி வீழ்த்தி னேன். உயிர்பிழைத்தோர் புறமுதுகிட்டு ஓடினர். அப் போது, யூதேய மக்கள் மட்டும் என்னோடு இணைந்து நின்றிருந் தால், இந்நேரம் காத் கைப்பற்றப்பட்டு, அவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும். இப்போது அவர்கள் யாருக்குத் தொண்டு செய்கிருர்களோ, அப்பெலித்தியர் களின் ஆண்டைகளாய் ஆகியிருப்பர். ஆனல் இந்தச் சீர் கெட்ட இசுரவேல் மக்கள் விடுதலையை விட, விலங்கினையே பெரிதும் விரும்பினர். தங்களின் கெடுமதியால் அடிமை களாய் மாறி அடிமைகளாகவே இருந்து கொண்டிருக் கின்றனர். நானே, அவர்களை விடுவிக்க இறைவனல் பணிக்கப்பட்டேன். எனினும் அவர்கள் என் ஆற்றலையும், அருந்திறத்தையும் ஐயப்பட்டனர்; வெறுத்தனர். தங்கள் நலனுக்காய்ப் பாடுபடுகிவர்களை மக்கள் கைவிடுவது எங்கும் பொதுவாக இருக்கிறது. என்றும் ஈகம் இரண்டகத்தால் விலை பேசப்படுகிறது. குழு ஆள்: உமது சொற்கள் அன்று கடவுளின் பிள்ளை களுக்கு எபிரேயர்கள் செய்த இரண்டகங்கள், பலவற்றை