பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 55 நினைவூட்டுகின்றன. இசுரவேலர்களின் விடுதலைக்காக மீதி யானியர்களோடு போரிட்ட சிதியோன் வீரர்கள் பசியால் துவண்டபோது, சுக்கோத்தினரும்”, "பெனுவேலரும்’ தங்கள் கோழையாலும் நன்றியின்மையாலும் உணவளிக்க மறுத்தனர். இவர்களின் நன்றி கெட்டமைக்கு மற்றுமோர் எடுத்துக் காட்டு எப்பிராமியர்கள் இவர்கள் குறுகிய மனப் பான்மையும், பிற யூதக் குடியினர் மீது பொருமையும் கொண்டவர்கள். அம்மோனியர்களிடமிருந்து யூதர்களின் நாட்டைக் காப்பாற்ற முயன்ற எப்தா விடத்தும் யூத மக்கள் நன்றிகெட்டு நடந்தனர். எப்தா எப்பிராமியர் களிடமிருந்து உதவி பெற முடியாமல் போனலும் அவன் அவர்களின் நாட்டைக் கடந்து சென்று அம்மோனியர்களைத் தோற்கடித்தான். இச்செயல் எப்பிராமியர்களுக்கு எரிச்ச லூட்டியது. ஒரு பெரும் போர் மூண்டது. அதில் எண்ணற்ற எப்பிராமியர்கள் கொல்லப்பட்டனர். எப்தா எவ்வித இரக்கமும் அவர்களுக்குக் காட்டவில்லை. தப்பியோட முயன்றவர்கள் யோர்தான் ஆற்றின் கழிமுகத்தில் யெப்தா வின் ஆள்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுத்து நிறுத்தப் பட்டோர் ஆற்றைக் கடக்க விரும்பினுல் கானறு' (ஷிபோலேக்) என்ற சொல்லைப் பலுக்கும்படி வற்புறுத்தப் பட்டனர். முறையாக ஒலிக்கத் தவறியவர்களை அங்கேயே கொன்றுபோட்டனர். சிம்சோன்: நீ சொன்ன சான்றுகளோடு எனது சான்றை யும் சேர்த்துக்கெர்ள். இசுரவேலர்கள் என்னையும் என் பணி களையும் புறக்கணிக்கலாம். ஆனல் என் மூலமாகக் கடவுள் அவர்களுக்குக் கொடுக்க விரும்பும் விடுதலையை அவ்வளவு எளிதாகப் புறக்கணிக்க முடியாது. இதற்காகவேனும் அவர் கள் தண்டிக்கப்பட வேண்டும். குழு ஆள்: கடவுள் நம்பிக்கை அற்றவர்களைத் தவிர, மற்றவர்களுக்குக் கடவுளின் வழிகள் முறையானவையே. தெய்வ நம்பிக்கையற்றவர்கள் இருப்பின், அவர்கள் தங்கள் வாழ்க்கையை அறியாமையிருளிலேதான் கடத்துகிருர்கள். கடவுள் காட்சியை நம்பாத சான்ருேர் எப்போதும் இருந்