பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 59 யும் செடியைப்போல் உன் வலிமையும், வனப்பும் வஞ்சக வலையில் வீழ்த்தப்பட்டு விலங்கிடப்பட்டிருக்கின்றன. வீரத் தால் புகழ் எய்திய அந்த சிம்சோனே, இப்போது அடிமை யாய் மாற்ருன் கண்ணிற்கு வெறுப்பூட்டும் ஒரு பொருளாய், கைதியாய், ஏழையாய், குருடனய் இருக்கிருன்? இருட் குகை யில் அடைக்கப்பட்டு, அடிமைகளோடு உழைக்கவேண்டிய வஞயிருக்கிருன்? பயனுள்ள பணிகளைச் செய்ய, ஒருமுறை இறைவனல் தெரிந்தெடுக்கப்பட்டுப் போதிய வலிமையுடன் படைக்கப்பட்ட ஒரு வ ன், மானிட இயலாமையால் தவறிழைப்பின், இவ்வளவு கொடுமையாக அவன் தண்டிக் கப்படக்கூடாது என்பது என் எண்ணம் அப்படிப்பட்ட மனி தனுக்கு ஆண்டவன் திடுமென அழி ைவ க் கொண்டுவரக் கூடாது அவனை எதிரிகளின் அடிமையாகவும், மானமிழந்த குடிககுரியவனாகவும், பழிக்குரியவனாகவும் மாற்றக்கூடாது. இத்தனைக் கொடுமையாக இறைவன் அவனைத் தண்டிக்கக் கூடாது. முந்தைய நற்பணிகளுக்குரிய மேன்மையைக் கொடுக்கவேண்டும். சிம்சோன்: தந்தையே, இறையாணையைக் குறைகூற வேண்டா. இந்தக் கொடுமைகள் எனது இயலாமையால் எனக்கு நேர்ந்தன. அவை முறையானவையே. நானே என் துன்பங்களுக்குக் காரணம். எனது இந்த இழிநிலைக்கு நானே முழு முதற் காரணம். எனது குடுமியில் மறைந்து கிடந்த எனது வல்லமையின் கமுக்கத்தை வெளியிட்டதன் மூலம் கடவுளின் புனிதமான அற்புதத்தை உரிய மரியாதை யின்றிப் புறக்கணித்துவிட்டேன். கமுக்கக் காப்புறுதியின் கீழ் கொடுக்கப்பட்டதை என்னல் காப்பாற்ற முடியவில்லை அதை நான் ஒரு பெண்ணிடம் வெளியிடடுவிட்டேன். அது வும் ஒரு நம்பிக்கையற்ற பகை இனத்தைச் சார்ந்த பெலித் தியப் பெண்ணிடம் வெளியிட்டுவிட்டேன். பெலித்கியர்கள் நம்பற் குரியவர்கள் அல்லர் என்பதை நான் நன்கறிவேன். அவர்களின் இரண்டகத்தைக் கண்டு நான் வியப்படைய வில்லை. ஏனெனில் கடந்த காலத்தில் அதை நான் பலமுறை அறிந்துள்ளேன். என் முதல் மனைவி திம்ன என்னே