பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மாமல்லன் சிம்சோன் புனிதமான கமுக்கத்தை ஒரு நெறிகெட்ட பெண்ணிடம் வெளியிட்டு விட்டேன். அவள் என் குடுமியை மழிக்கச் செய்து ஆண்மை அழிக்கப்பட்ட செம்மறியைப்போல் வலிமையற்ற வளுக்கிள்ை. அவளது பிடியில் நான் செயலிழந்து நின்றேன். எனது வலிமையின் மூலமாயிருந்த முடியைக் கொள்ளே யிட்டுப் பறித்துக்கொண்டு என்னை ஒரு கேலிக்குரிய பொரு ளாய் மாற்றிப் பகைவர்களுக்கு என்னைக் காட்டிக் கொடுத் தாள. குழு ஆள்: மதுவிற்கு மண்டியிட்டுத் தங்கள் மறவாண் மையை இழந்து நின்ற மாவீரர்கள் பலருண்டு. சிம்சோனே! நீ, அப்படிப்பட்டவர்களை நினைவுகூர்ந்திருக்க வேண்டும். செந்நிறத்தில் மிளிர்கின்ற மணமிக்க மதுவை நீ நுகர்ந்ததோ பருகியதோ கிடையாதா? மது அனைவரையும் மயக்கும். அது கடவுள்களையும் மாந்தர்களையும் சமமாகவே மகிழுட்டும். அத்தகைய மது உன்னை மயக்க நீ முந்தி இருக்கக்கூடாது. வற்ருத நீரோடையின் தெளிந்த நீரை மட்டுமே நீ பருகி யிருக்க வேண்டும். சிம்சோன்: எங்கெல்லாம் நீரூற்றின் தெள்ளத் தெளிந்த நீர், கதிரவனின் கதிர்வீச்சால் தூய்மைப்படு த்தப்பட் டிருந்ததோ அந்த நீரையே நான் பருகி வளர்ந்தேன். அப படிப்பட்ட தண்ணீராலேயே என் வேட்கையைத் தீர்த்தேன். நான் என்றுமே மயக்கூட்டும் மதுவை அருந்தியதில்லை. மது வின் இன்பத்தில் திளைத்தவர்களைக் கண்டு பொருமைப் பட்டதும் இல்லை. குழு ஆள்: வெறியூட்டும் மதுவை அருந்துவது, உடல் நலனுககு உரமூட்டும் என எண்ணுவது மிகப் பெரிய மடமை. நீரோடையின் தெளிந்த நீரே சிம்சோனுக்கு உயாந்த கடவுள் தந்த குடிப்பு. மது, கடவுளால் விலக்கப்பட்ட குடிப்பு. மது இலலாமலே, ஒடையின் தெளிந்த நீரால் கடவுள் உனக்கு உரமேற்றவில்லையா. இதிலிருந்து மது உடல உரத்திற்கு உகந்தது இல்லை எனத் தெரிகிறதல்லவா?