பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மாமல்லன் சிம்சோன் படுக்கையில் கிடந்து, உழைப்பின்றி, முதுமையால் உருக் குலைந்து கிடப்பதே நல்லது. உனக்கு நினைவிருக்கிறதா? ஒரு முறை நீ உன் பகைவர்களைப் போரிட்டு அழித்தபின், வேட்கையால் த வி த் த போது, இறைவன் அழகிய நீரோடையை உன் முன் பொங்கிவரச் செய்து உன் வேண்டு கோளுக்கிணங்க உன் வேட்கையைத் தணிககவில்லையா? அத் தேவன் உன் இழந்த விழிகளே இப்போது மீண்டும் தரலாம் அல்லவா? அப்படித் தரின் இபபோதைய நிலையைவிட நீ அவருக்குப் பெருந்தொண்டு செய்யலாம் அல்லவா? நான் நம்புகிறேன். அப்படி நடக்குமென்று. இன்னும் அந்த அற்புத ஆற்றல உன் முடியில் ஒட்டிக்கொண்டிருப்பது வேறு எந்த நோக்கத்திற்காக என்று நீ நினைக்கிருய்? உனக்கு இறைவன் ஈந்த அந்த ஆற்றல் உன்னில் இன்னும் இருக்கிறது. அது பயனற்றுப்போகவில்லை. அ வ ரி ன் அற்புத ஈவு என்றும் பயனற்றுப் போவதில்லை. சிம்சோன்: நீங்கள் எதிர்பார்ப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றுதான் நடக்கும் என்று என் உள்ளுணர்வு எனக்கு உணர்த்துகிறது. என் ஒளியற்ற இருண்ட கண்கள் மீண்டும் ஒளியை துகரப்போவதில்லை. மற்ருேர் ஒளியாம் என் உயிர்கூட என்னிடம் நீண்ட நாள் இருக்கப்போவதில்லை. விரைவில நான் பார்வையின்மையால் உண்டான இருளின. லும், சாவிருளினலும் ஈர்க்கப்படப் போகிறேன். என் உயிர் சோர்ந்துபோகிறது. நம்பிக்கை அனைத்தையும் இழந்து போகிறேன். என் இயல்பாற்றல் செயலிழந்துபோகிறது. எனது புகழின் நாள்கள் கடந்துபோகின்றன. இகழ்ச்சி யான நாள்கள் முடியப்டோகின்றன. விரைவில் நான் இறப்பு என்னும் நீடுதுயில் அடையப்போகிறேன். மனுேவா: இப்படிப்பட்ட உள்ளுணர்வை நம்பாதே! இவ் உள்ளுணர்வு உ ன து மனததுயராலும், அளவிட முடியாத அல்லலிலுைம், உனது கற்பனையாலும ஏற். பட்டதே. என்னைப் பொறுத்தமட்டில், பெற்ருேருக்குரிய கடமையை நான் புறக்கணிக்க முடியாது. எனக்கு இனிக் காலம் தாழ்த்த இயலாது. உடனே சென்று தண்டம்