பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 69 தந்தோ வேறுவகையிலோ உன்னை விடுவிப்பதே என் கடமை. அதுவரை உன் ஆருயிர் நண்பர்களின் ஆறுதல் மொழி களுசகுச் செவிமடு. சிம்சோன்: அந்தோ! நம் துயரங்கள் உடலளவில் மட்டும் இல்லையே. அவை என் உள்ளத்திலும் ஊடுருவிச் சென்று தொல்லைப்படுத்துகின்றனவே. நெஞ்சு, தலை, மார்பு, சிறுநீரகம் அனைத்துமே அல்லல்படட்டும். மனம் மட்டும் அல்லவிலிருந்து விடுபடட்டும் ஏனெனில் மனத்துயர் ஒருவனின் ஆவியைச் சிறைப்படுத்திச் சிதைத்துவிடுமே. உடல் துயரைவிட மனத்துயர் மிகக் கொடியது. உடல் துயர் உடலின் சில பகுதிகளை மட்டுமே தாக்கும். ஆனல் மனத்துயரோ உடலின் ஒவ்வோர் உறுப்பிலும் பரவிக் கலந்து தொல்லைப்படுத்தும். எனது துயரம் தீராத நோயைப்போல் என்னைத் துன்புறுத்துகிறது. விடிவே இல்லாத வேதனையாகிவிட்டது. கொப்புளம் போன்ற அழுகிய ஆருத புண்ணினைப்போல் எனது துயரம் என்னைத் துன்புறுத்துகிறது. என் எண்ணங் களே ஒரு வல்லரக்கன்போல் என்னை அடக்கி என் உணர்வு களை உருக்குலைத்து வருகின்றன. ஆருப் புண்ணை அது என் அடி மனத்தில் உருவாக்கிவிட்டது அழுகிய, ஆரு அப் புண்ணின் எரிச்சலைப் பனிபடர்ந்த ஆல்ப்சு மலையின் வாடைக் காற்ருல் கூடத் தணிக்க முடியாது. எந்த மருந்தும் அந்த மனப் புண்ணினைக் குணப்படுத்த முடியாது. உறக்கம் என்னை இறப்புக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு ஒட்டுமொத்த மாக விலகிக்கொண்டது. இறப்பே எனது துயர்க்கு ஒரே விடுதலை. . கருவிலிருந்தே கடவுளுக்கெனப் படைக்கப்பட்டவன் நான். அவரால் தெரிந்துகொண்டு அவராலே வளர்க்கப் பட்ட குழந்தை நான், தெய்வீகப் பணிகளைச் செய்வே னென்று என் பிறப்பின்போது வருவது உரைக்கப்பட்டது. இநத முன்னேட்டம் இருமுறை உரைக்கப்பட்டது. அவரின் தெய்வீகப் பராமரிப்பில், மதுவிலிருந்து விலகி, நலமாக வளர்ந்தேன். மாந்தர்களால் கூடாத சில சிறப்