பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மாமல்லன் சிம்சோன் மாற்றமுடையவர்கள் அல்லர். தங்கள் கணவர்களின் பொறுமையைக் காண்பதே அவர்களின் முதல் நோக்கம. எப்படிக் கவர்ச்சியாகத் தந்திரமாகத் தம் கணவர்களின் இயலாமை அல்லது நற்பண்பைத் தாக்குவது என்பதே அவர்களின் தலையாய நோக்கம். மீண்டும் கணவனின் கமுக்கத்தை மேலும் அறிந்து காட்டிக்கொடுக்கவே அவர்கள் முயல்வார்கள். மனம் வருந்தி மன்னிப்புக் கோருபவர்களை மன்னித்தல் வேண்டும் என்று சொல்லும் அறிவர்கள்கூட இப்படிப்பட்ட பெண்களால் ஏமாற்றப்பட்டிருக்கிருர்கள. மன்னிக்கப்பட்டுத் தங்கள் கணவர்களை மனத்தால் விரும்பி வந்த மனைவியர் நச்சுப் பாம்பாய்த் தம் கணவர்களுக்குத் இங்கு விளைவித்துள்ளனர். அப்படிப்பட்ட ந ச் சு மனம் கொண்ட பெண் க ளி ன் பிடியிலிருந்து தப்பமுடியாமல் கணவன்மார் தொல்லைப்பட்டுள்ளனர். இப்படிப்பட்டவர் கள் தங்கள் வாழ்க்கையை வருங்கால மரபினர்க்கு ஒரு முன்னறிவிப்பாய் அமைத்துள்ளனர். எனது வாழ்வும்கூட எதிர்கால மரபுக்கு அப்படிப்பட்ட முன்னறிவிப்பாய் அமைந திருக்கிறது. தீலியாள்: சிம்சோனே, கேள். மன்னிப்புக்கேட்டு, என் தவற்றின் கடுமையை நான் குறைக்க முயலவில்லை. என் குற்றங்கள் மிகைப்படுத்தப்படாமல் சீர்தூக்கப்படின் என்னை மன்னிக்கும் மனநிலை உங்களுக்கு ஏற்படலாம் அல்லது என் மீது வெறுப்பாகிலும் குறையலாம். எனது தவறு பொது வாக ஒரு பெண்ணின் குறைபாட்டால் ஏற்படுவது. தங்கள் கணவர்களின் கமுக்கங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் பொதுவாக எல்லாப் பெண்களுக்குமே உரியது தான். ஆளுல் அதே பெண்மைக்குரிய குறை அதை வெளிப் படுத்தி விடுகிறது. இவ் விரண்டு குறைகளும் பெண்களுக்குப் பொதுவானவை. அது என்னிடத்திலும் இருக்கிறது. ஆகவே நான் குற்றவாளிதான். ஆயினும் எனது வற்புறுத் தலுக்கு இணங்கி உங்கள் வலிமையின் கமுக்கத்தையும் பாது காப்பின் கமுக்கத்தையும் வெளிப்படுத்தியது உங்கள் குறை அல்லவா? உங்கள் கமுக்கத்தை என்னிடம் வெளியிட்டதன்