பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மாமல்லன் சிம்சோன் சொல்வேன், அவர்கள் உங்களைக் கைதியாகத் தங்கள் மேற் பார்வையில் வைத்திருப்பதைத் தவிர வேறு எந்தத் தீங்கும் உங்களுக்குச் செய்யாதிருப்பதாக உறுதியளித்தார்கள். அந்த உறுதிமொழிகள் எனக்கு ஆதரவாயின. நீங்கள் உரிமையுடன் இருந்தால் பல இடர்களை ஏற்க நேரிடலாம். என்னைத் துயரத்தில் தவிக்க விட்டுவிட்டு நீங்கள் சென்று விடலாம் என்று எண்ணினேன். உங்கள் உடல் வலிமை உங்களிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டால், மறச்செயல்களை நோக்கி வெளியே செல்லமாட்டீர்கள் என்று எண்ணினேன். உங்கள் அன்பை அதன்மூலம் இரவும் பகலும் துய்க்கலாம் என்று நினைத்தேன். அதன்பின் நீங்கள் என் அடிமையாய், நீங்கள் வெறுக்கின்ற பெலித்தியர்களின் அடிமையாய் இல்லா மல், எனது அன்பின் அடிமையாய் வாழ்வீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் என் விலைமதியா உடைமை. தொலை விடங்களுக்குச் சென்று தொல்லையான பணிகளில் உங்களைத் தோயச்செய்து உ ங் க ளை நான் இழக்க விரும்பவில்லை. வீட்டிலேயே உங்களை வைத்துக்கொள்வதின்மூலம் நான் பிரிவுத் துன்பமோ அச்சமோ இன்றி இருக்கலாம் என்று எண்ணினேன். மற்றவர்களுக்கு இ ந் த க் காரணங்கள் பொருந்தாதனவாக, மடமையாகத் தோன்றிலுைம் எனது காதல் பார்வைக்கு அவை ஆழமாகப்பட்டன. நல்லெண்ணத் தோடு கூடிய காதல்கூடச் சிலவேளைகளில் கடுமைகளை ஏற் படுத்துவதுண்டு. ஆனல் அவை பரிவையும், மன்னிப்பையும் பெறுவதுண்டு. மற்றவர்களைப்போல் அல்லாமல், உங்கள் வலிமை உறுதியைப்போல் என்னிடத்தில் கடுமையாக இராதீர். நீங்கள் உடல் வலிமையில் மற்றவர்களே மிஞ்சிய வர். இரக்கமற்ற தன்மையிலும் மற்றவர்களை விஞ்சிட முயல வேண்டா. சிம்சோன்: உனது தண்புனற் பேச்சு எவ்வளவு தந்திர முள்ளது. என் குறையைச் சுட்டிக்காட்டி எனக்குச் சின மூட்டவே, அவள் தன் குறையை ஒத்துக்கொள்கிருள். மனம் வ ரு ந் தி த் திருந்தியன்று: என்மீது வெறுப்புள்ள வளாகவே, அவள் இங்கே வந்திருப்பதாகத் தோன்றுகிறது.