பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 77 உனது தவற்றுக்கு வழிகாட்டியாய் நான் முதலில் தவறு செய் தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அது ஒரு கசப்பான உண்மையே, எனினும் ஏற்றுக்கொள்கிறேன். நீ என்ன ஏமாற்றுமுன், நானே என்னை ஏமாற்றிக்கொண்டேன். நான் என் தவற்றை மன்னிக்கவில்லை. மாருக என்னுடைய தவற்றுக்காய் நான் என்னையே வெறுக்கிறேன். எனவே உனக்கு நான் தர நினைக்கும் மன்னிப்பு, எனக்கு நானே கொடுத்துக்கொண்ட மன்னிப்பைப்போல் கொடுமையாக நடுநிலைமையாய் இருக்கும். உனது மனமாற்றம் பொய்யாய் வஞ்சகமாய் இருப்பதால், எனக்கு நானே கொடுத்துக் கொண்ட இந்தக் கடுமையான மன்னிப்பு, இந்த உனது மன மாற்ற நாடகத்தைக் கைவிட்டு விடும்படி செய்துவிடும். நீ குறையுடையவள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பெலித்தியர்களின் செம்பொன் உன் மனததைக் கட்டுப் படுத்தமுடியாமல் செய்துவிட்டது. அவ்வளவு குறையுடை யவள் நீ என்பதை ஏற்றுக்கொள்கிறேன். குறைபாடே, மன்னிப்புக்குரிய காரணமாயின், கொலை காரர்கள், காட்டிக்கொடுப்பவர்கள், தங்கள் தந்தையரைக் கொல்பவர்கள், பொருந்தா உடலுறவு கொள்பவர்கள், புனிதமானவற்றை மாசுபடுத்துபவர்கள், அனைவருமே தங்கள் குறையே தான் தங்கள் தவறுதலுக்குக் காரணம் என்று கூறி மன்னிப்புக் கோரலாமே. எனவே குறைபாடு என்று மன்னிப்புக்காக நீ சொல்லும் காரணம் உனக்கு மாந்தனிடமிருந்து மட்டு ம ன் று, கடவுளிடமிருந்துகூட மன்னிப்பைப் பெற்றுத் தராது. அன்பினுல் என்னே நீ காட்டிக்கொடுத்தாய் என்பது உனது இரண்டாவது மொழி. அது காதல் அன்று, காமம். உனது காமப்பசியைப் போக்கவேண்டும் என்ற ஆசை. காதல் தனக்கு மாற்ருகக் காதலையே தேடும். வேறு எதை யும் நாடாது. அகற்றமுடியாத வெறுப்புக்குரிய உன்னை நான் விரும்புவேன் என்று எப்படி நீ நம்புகிருய்? என்னை நீ காட்டிக்கொடுத்தாய் என்பதை நான் அறிந்த பின்னும், உன்னை நான் வேட்பேன் என்று எப்படி நம்புகிருய்?