பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 79 சிம்சோன்: சுற்றி வளைத்துப் பேசிய உன் வீண் பேச்சு இறுதியில் மதத்தில் வந்து முடியும் என்று நான் முன்பே நினைத் தேன். அப்படியே முடிந்துவிட்டது. உனது மத வேண்டு கோள் ஒர் அப்பட்டமான இரண்டகம். ஆளுல் நீ என்மீது கொண்டிருப்பதாகக் கூறிய அந்த உண்மை அன்பு, வேறு விதமாக உன்னைச் சிந்திக்கவும் செயல்படவும கற்பிக்க வில்லையா? நான் உன்னை உண்மையாய் விரும்பினேன். என் இசுரவேலின் இளம் பெண்களை நான் தேர்ந்தெடுக்கவில்லை. மாருக, என் பகை இனத்துப் பெண்ணுகிய உன்னை என் மனைவியாய்த் தேர்ந்தெடுத்தேன். இவையெல்லாம் உனக்கு நன்கு தெரியும். உன்மீது கொண்ட காதலால் என் ஒளிவு மறைவு அனைத்தையும் உன்னிடம் நான் ஒப்படைத்ததினால் இந்த உண்மையையும் நீ நன்கறிவாய். வேறு எவ்வகை எண்ணத்திற்கும் இடமளிக்காமல உன் வற்புறுத்தலுக்கு இணங்கினேன். உனக்கு எதையும் மறுக்காத நான், இன்று எதிரியின் கைகளில் இத்தகைய இடர்ப்பாடான நிலையில் இருக்கிறேன். தொடக்கமுதலே பெலித்தியர்களின் பகை யாகக் குறிக்கப்பட்ட என்னே ஏன், நீ கணவனுய்த் தெரிந்து கொண்டாய் என்பதை எனக்குச் சொல். எனக்கு மனைவி யானவுடனேயே உன் பெற்ருேர்களையும், நாட்டையும் நீ துறந்திருக்கவேண்டும். நான் அவர்களின் அடிமையல்லேன். அவர்கள் பாதுகாப்பில் உள்ளவனும் அல்லேன். நானே எனது உயிரின் ஆண்டை. நீ எனது ஆளுகைக்குட்பட்ட குடி மகள். அவர்களுடைய மகளல்லை. என் வாழ்வுக்கெதிராக, உன் உதவியோடு ஏதேனும் செய்ய விரும்பியிருந்தால், அது இயற்கை விதிக்கு முரணுனது. நாட்டின் சட்டங்களுக்கும் அப்பாற்பட்டது. ஒரு மனைவி தன் கணவனுக்கு மட்டுமே பற்றுள்ளவளாக இருக்கவேண்டும். அவர்கள் உன் நாட்டு மக்களல்லர். அவர்களை, ஒருவனின் மனைவியை, அவளின் கணவனைக் காட்டிக்கொடுக்கும்படி வற்புறுத்திய மக்களே, கடமைத் த. வ றி ய பற்றற்றவரிகளாய் நடத்தியிருக்க வேண்டும். நீயோ அவர்களுக்கு இணங்கிய்ை. இது பகைமை யினும் கீழான பண்பற்ற செயல். எங்கள் நாட்டிலே மேன்மையாகக் கருதப்படுகின்ற சட்டங்க ளே அவர்கள்