பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மாமல்லன் சிம்சோன் சிம்சோன்: அவள் போகட்டும். அவள் தன்னை யாரென்று காட்டிவிட்டாள். என்னைத் தாழ்த்தவும், என் மடமையைப் பெருக்கவுமே கடவுள் அவளை அனுப்பியுள்ளார். எனது வாழ்வை, பாதுகாப்பை, பரம்பொருள் மறையை ஒரு நச்சுப் பாம்பிடம் வெளிப்படுத்தியதின் விளைவே இது. குழு ஆள்: எழிலுள்ளவள் எனினும் இடருள்ளவள் வெறுத்தொதுக்கிய காதலை மீண்டும் பெறுகின்ற ஆற்ற லுள்ளவள். அவள் வேண்டுகோள், கவர்ச்சி ஆகியவற்றை எளிதில் புறக்கணிக்க முடியாது. சிம்சோன்: காதலர்களிடையே ஏற்படுகின்ற பிணக்கு முடிவில் இனிதாய்ப் புதிய உந்தாற்றலோடு காதலர்களை இணைக்கும். திருமண வாழ்வில் வஞ்சகமோ, ஒருவருக்கு இடரை விளைவிக்குமே அன்றி, இனிதாய் முடிவதில்லை. குழு ஆள்: நற்பண்பு, அறிவு, ஆற்றல், வலிமை, அழகு, சிறப்பு இவற்றுள் எதுவாலும் பெண்ணின் காதலைப் பெறவோ, நிலைநிறுத்தவோ மு டியாது. பெண்ணின் காதலைக் கணிப்பது கடினமானது. ஒருநாள் இல்லை பல நாள் முயன்ருலும் ஆடவரால் பெண்ணின் காதலின் கமுக்கத்தை அறிய முடியாது. அது நீங்கள் பெலித்தியர்களிடம் சொன்ன புதிர் போன்று புரியாத ஒன்று. மேலே கூறப்பட்ட இயல்பு களோ இயற்கையோ பெண்ணின் காதலைப்பெற வல்ல தாயின் உமது பெலித்திய மனைவியர் திருமண வாழ்க்கை ஒப்பந்தத்தை இவ்வளவு எளிதில் உடைத்திருக்க மாட்டார் கள். உம்மோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது எவ்விதச் சிறப்பும் இல்லாத உம் நண்பரை உமக்கு மாற்ருக உம் முதல் மனைவி மணந்திருக்கமாட்டாள். உம் இரண்டாவது மனைவியும், உமது குடுமியை வஞ்சகத்தால் பிரித்திருக்க மாட்டாள். இந்த இழப்பு உமக்குப் பேரிழப்பாய் மாறி விட்டது. உள்ளழகு, நற்பண்பு, நல்மனம், நல்லெண்ணம் இவை இல்லாமையால்தான் பெண்களுக்குப் புற அழகு கொடுக்கப்பட்டதோ? ஒருவேளை ஆண்டவன் பெண்களைப் பர பரப்பில் அரைகுறையாய்ப் படைத்துவிட்டானே? எனவே தான் நன்மைக்கும் தீமைக்கும் அவளால் வேறுபாடு காண