பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/276

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

273

அவன் தன் இடுப்பில் செருகி வைத்திருக்கும் பணப்பையை வெடுக்கென்று பிடுங்கி, 'இன்று எவ்வளவுக்கு விற்றுக் கொண்டு வந்திருக்கிறீர்கள்?’ என்ற கேட்டுக்கொண்டே அதன் முடிச்சை அவிழ்ப்பாள். ‘இருபத்தெட்டுக்கு!’ என்பான் அவன். 'நிஜமாகவா?' என்று கேட்டுக்கொண்டே அவள் விளக்கடிக்குச் சென்று, மீண்டும் அதைக் கீழே கொட்டி எண்ணிப் பார்ப்பாள். அங்ஙனம் எண்ணிப் பார்க்குங்காலையில் ‘குப்'பென்று விளக்கு அணையும். ‘பாழாய்ப்போன காற்று எங்கிருந்தோ வந்து இந்த விளக்கை அனணத்துவிட்டதே? அம்மா, இங்கே வந்து இந்த விளக்கைக் கொஞ்சம் ஏற்று, அம்மா!’ என்று அவள் அப்பொழுதும் விடாமல் பணத்தை எண்ணிக்கொண்டே தன் அம்மாவுக்குக் குரல் கொடுப்பாள். அடுக்களையில் இருக்கும் அவள் அம்மா அங்கிருக்கும் விளக்கைக் கொண்டு வந்து அந்த விளக்கை ஏற்றிவிட்டுப் போவாள். அன்னலட்சுமி தொடர்ந்து பணத்தை எண்ணி முடித்துவிட்டு, ‘இருபத்தெட்டு என்றீர்களே, இருபத்துமூன்றுதானே இருக்கிறது?' என்பாள். 'அப்படியா? நான் சரியாக எண்ண வில்லையோ, என்னவோ?’ என்பான் அவன். 'நீங்களும் உங்கள் கணக்கும்!' என்று அவன் கன்னத்தில் ஓர் இடி இடிப்பாள் அவள். 'ஆசையோடு இடிக்கிறாளாக்கும்!' என்று அவன் அதையும் வாங்கிக்கொண்டு இளித்து வைப்பான்.

இப்படி ஒரு வாரமல்ல, இரண்டு வாரமல்ல; ஒவ்வொரு வாரமும் அவன் கணக்குக்கும் அவள் கணக்குக்கும் ஐந்தோ, ஆறோ குறைந்துகொண்டே வந்தது. அப்படிக் குறையும் போதெல்லாம் விளக்கும் தவறாமல் ‘குப், குப்' பென்று அணைந்துகொண்டே வந்தது. இதில் ஏதோ மர்மம் இருக்க வேண்டும் என்பதை ஒருவாறு ஊகித்த ஆண்டியப்பன், சந்தையிலிருந்து கொஞ்சம் வெளிச்சத்தோடு வீட்டுக்குத் திரும்ப முயன்றான்; முடியவில்லை. 'நான்தான் அங்கேயே ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக எண்ணிப் பார்த்து

மி.வி.க -18