பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

307

28

இருபத்தெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்

ஷீலா சொன்ன கால் கடுக்க நின்ற கதை

"கேளாய், போஜனே! எங்கள் விக்கிரமாதித்தருக்குப் பத்து வயதுப் பாலகன் ஒருவன் உண்டு. ஆபீசுக்குச் செல்லுங்காலை அவனைத் தினந்தோறும் தம்முடைய காரிலே ஏற்றிக்கொண்டு போய் அவர் பள்ளியிலே விட்டுவிட்டுப் போவதுண்டு. அங்ஙனம் விட்டுக் கொண்டிருந்தகாலை அவன் ஒரு நாள், ‘எனக்கு நேரமாச்சு, நேரமாச்சு!’ என்று குதியாய் குதிக்க, ‘என்னடா நேரமாச்சு, மணி ஒன்பதே முக்கால்தானே ஆச்சு?' என்று அவர் அவசர அவசரமாக 'டிரஸ்' செய்து கொண்டே சொல்ல, 'உங்களுக்கு என்ன அப்பா, சொல்லாமல்? நேற்று அரை மணி நேரம் வெயிலில் நின்ற வேதனை எனக்கல்லவா தெரியும்?' என்று பையன் சிணுங்க, ‘ஏன் நின்றாய், வீட்டுக் கணக்குப் போட்டுக்கொண்டு போகவில்லையா?' என்று அப்பா கேட்க, 'அதெல்லாம் ஒன்றுமில்லை, அப்பா! ஐந்து நிமிஷம் 'லேட்'டாகப் போனேன்; அதற்காக நின்றேன்!' என்று அவன் அழாக்குறையாகச் சொல்ல, 'அதற்கா உன்னை அரை மணி நேரம் வெயிலில் நிற்க வைத்தார்கள்? 'நான் சாட்சாத் விக்கிரமாதித்தரின் பிள்ளை' என்று சொல்லிப் பார்த்திருக்கக் கூடாதோ?' என்று அவர் சிரித்துக்கொண்டே சொல்ல, ‘எல்லாம் சொன்னேன்; 'அப்படியானால் ஒரு மணி நேரம் நில்' என்று சொல்லிவிட்டார் வாத்தியார்!' என்று பையன்