பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/316

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

313

கீலீஸ்காரர் அவரை மெல்ல விசாரிக்க, ‘ஏன்?' என்று அவர் ஒன்றும் புரியாமல் கேட்க, ‘இதுவரை அனுப்பியிருந்தாலும் இனிமேல் அனுப்பாதீர்கள்! அனுப்பினால் என்னைப்போல் பலர் மூர்ச்சையாகிக் கீழே விழலாம்; அதனால் பல விபத்துக்கள் நேரலாம். அந்த விபத்துக்களின் காரணமாக நானே உங்கள் பெண்ணைக் கைது செய்தாலும் செய்யலாம்!' என்று கீலீஸ்காரர் அளக்க, ‘இதென்ன வம்பு, அதற்குள் இவள் விரும்புவதுபோல் இவளை எந்தப் போலீஸ்காரன் தலையிலாவது கட்டி வைத்து விடுவதுதான் நமக்கு நிம்மதிபோலிருக்கிறதே!' என்று நினைத்த தகப்பனார், 'அதெல்லாம் இருக்கட்டும்; உங்கள் பெயர் என்ன?’ என்று கீலீஸ்காரரைக் கேட்க, ‘செவன், நாட், திரீ!' என்று கீலீஸ்காரர் ஏக மிடுக்குடன் சொல்ல, 'அட, நான் அதைக் கேட்கவில்லை ஐயா! உங்களுக்கு உங்கள் அப்பாவும் அம்மாவும் வைத்த பெயர் என்ன என்று கேட்கிறேன்!' என்று அவர் அலுப்புடன் சொல்ல, 'ஓ, அதுவா? பொன்னுச்சாமி!’ என்று கீலிஸ்காரர் தன் பெயருக்கு நடுவே வரும் ‘ச்'சன்னாவுக்கு ஒரு தனி அழுத்தம் கொடுத்துச் சொல்ல, ‘பொன்னுச்சாமியா, உங்களுக்கு எந்த ஊர்?’ என்று அவர் கேட்க, ‘இதே ஊர்தான்!' என்று பொன்னுச்சாமியும் சொல்ல, அதற்கு மேல் அவருடைய குலம், கோத்திரம் எல்லாவற்றையும் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்ட பொன்னியின் தகப்பனார், 'இனிமேல் நீங்கள் போய்த் திருடனைப் பிடிக்கலாம்!' என்று சொல்ல, 'ஆமாம்! ஆமாம்! அதை நான் மறந்தே போய்விட்டேன்!' என்று கீலீஸ்காரர் அப்படியும் இப்படியுமாகப் பாய்ந்து பாய்ந்து சென்று பார்த்தபடி, 'ஓடு, ஓடு’ என்று ஓடுவாராயினர்.

பொன்னுச்சாமியின் தலை மறைந்ததும் பொன்னியின் தகப்பனார் தம் மகளைக் கூப்பிட்டு, 'போலீஸ்காரரைத்தான் கலியாணம் செய்துகொள்வேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாயே, அம்மா! இப்போது இங்கே வந்து