பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

327

32

முப்பத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்
நித்தியகல்யாணி சொன்ன

விக்கிரமாதித்தனைக் கண்ட
சாலிவாகனன் கதை

"கேளாய், போஜனே! நகரே 'நவராத்திரி விழா'க் கோலம் பூண்டிருந்த சமயம் அது. மிஸ்டர் விக்கிரமாதித்தர் குடும்ப சமேதராகக் கடை வீதிக்குச் சென்று, அந்த வருடம் கொலு வைப்பதற்காகப் புதிய புதிய பொம்மைகளைத் தேடித் தேடி வாங்கிக்கொண்டிருந்தார். அதுகாலை அவரைக் கண்ட அவருடைய நண்பர் ஒருவர், ‘ஹெல்லோ, மிஸ்டர் விக்கிரமாதித்தன்! ஹெள ஆர் யூ?’ என்று விசாரிக்க, 'விசாரிப்பதைத் தமிழில் விசாரிக்கக் கூடாதா, ஐயா?' என்று விக்கிரமாதித்தர் கொஞ்சம் தமிழ்ப் பற்றோடு கேட்க, 'இது கலப்பட யுகம் சுவாமி! இந்த யுகத்தில் அரசியல்வாதிகளைத் தவிர வேறு யார் எதில் அசலைத் தேடிக்கொண்டிருக்க முடியும்?’ என்று அவர் சிரித்துக்கொண்டே வந்து மிஸ்டர் விக்கிரமாதித்தரின் கையைப் பிடித்துக் 'குலுக்கு, குலுக்கு' என்று குலுக்க, இந்தக் காட்சியைக் கவனித்துக்கொண்டிருந்த பாதையோரத்துப் பொம்மைக் கடைக்காரர் ஒருவர் சட்டென்று எழுந்து தன் மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு நின்று, ‘வாருங்கள், வாருங்கள்!' என்று விக்கிரமாதித்தரை அகமும் முகமும் ஒருங்கே மலர