பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

மேற்கு நாட்டுத் தத்துவ மேதைகளை எல்லாம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் மூல ஆசிரியர் ஆங்கில நூலில். அந்தப் பெயர்களும் பிறவும் தமிழ் வாசகர்களுக்குப் பழக்கமில்லாதவை. அவற்றை ஆங்கிலத்தில் சொல்வது எளிது. தமிழில் சொல்வது கடினம். இது இரண்டாவது காரணம்.

அந்த விஷயங்களில் சஞ்சாரம் செய்யத் தொடங்கி விட்டால் சிருங்கேரிப் பிரயாணத்திலே வாசகர்களுக்கு அலுப்புத்தட்டி விடுமோ என்ற பயம். எனவே அவற்றை நீக்கி ஒவ்வோர் அத்தியாயத்தின் சாரத்தையும் விடாமல் தந்திருக்கிறேன்.

தமிழ் மொழிபெயர்ப்பாளர் என்ற உரிமையில் மேற் கொண்ட என் முடிவுக்கு வாசகர்கள் மன்னிப்பார்களாக.

என்பால் அருள்மாரி பொழியும் மகா சந்நிதானம் அவர்கள் எனது தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஆசி கூறித் திருமுகம் அனுப்பியிருக்கிறார்கள்.

அவர்கள் திருவடித் தாமரைகளில் விழுந்து வணங்குகிறேன்.

சக்திதாசன்.