13
சென்றது ரோடு. அங்கே கிராமத்துப் பெண்டிர் பலர் தம் துணிகளைத் துவைத்தல் கண்டோம். பஸ் நிற்குமிடங்களில் எல்லாம் பழக்கடைகள், கைவேலைப் பொருள் விற்கும் கடைகள், காப்பிக் கடைகள்! ஓரிடத்தில் சந்திர லாப என்ற வாழைப் பழத்தைக் கண்டு அதிசயத்து நின்றேன். அது மிக ருசியாயிருந்தது. ஆனால் மழைக் காலத்தில் அதை சாப்பிடக் கூடாது என்று ஒரு நம்பிக்கை.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஊடே சிக்மகலூர் காடுகளைத் தாண்டிச் சென்றோம். வன விலங்கு எதுவும் காணப்படவில்லை. குரங்குகள் மட்டும் பல்லைக் காட்டின. மலைகளிலும் சரி, காடுகளிலும் சரி, தோட்டப் பகுதிகளிலும் சரி எங்கும் ஒரே வனப்பு, மனேரம்மியமான காட்சி. பிரயாணம் செய்யும் போதே பற்றற்ற நிலையுண்டு பண்னும் சூழ்நிலை.
நாங்கள் சென்ற பஸ்ஸில் ஏற்கெனவே அளவுக்கு அதிகமான பேர் இருந்தனர். இருந்தாலும் வழியிலே வண்டியை நிறுத்தி ஏற்றிக்கொண்டு சென்றது அந்தப் புஷ்பக விமானம்.
எனது சிருங்கேரிப் பிரயாணம் மறந்துவிட்ட எனது எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள ஏற்பட்டது போலாயிற்று. இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு ஒருமுறை நான் அங்கு சென்றதுண்டு. மீண்டும் சிருங்கேரிக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் நாளுக்குநாள் வலுத்துக்கொண்டேயிருந்தது. முதல்முறை நான் சென்ற போது எதிர்பாராத ஒரு வரப்பிரசாதம் கிடைத்தது. அந்த நிலையில் அதை ஏற்று, அதன் பெருமை முழுவதும்