பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

நன்கறியும் திறமை எனக்கில்லாது இருந்தது. எனவே மீண்டும் ஒருமுறை சிருங்கேரி செல்ல வேண்டும் என்ற துடிப்பு எனக்கு ஏற்பட்டது. சிருங்கேரி செல்லாதவரை அத்துடிப்பு ஓயாது போல் தோன்றியது. எமர்ஸன், கிதே, பிராட்லி மாக்ஸ் முல்லர், வால்ட் விட்மன், விவேகானந்தர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் எனது துடிப்பை மேலும் தாங்க முடியாததாக்கினர்.

ஸ்ரீ ஜகத்குரு சந்திரசேகர பாரதி மகாஸ்வாமி தமது பூத உடல் நீத்தார் என்று செய்தி கேட்டு இடிந்து போனேன். ஆண்டுகள் உருண்டு ஓட ஓட அந்த துக்கம் மேலும் அலைபோல எழுந்தது. அந்த அலையிலே நான் மூழ்கி வாழ்வை மறந்தேன். எனக்கு அவரே குரு - தர்மத்தின் பேரொளி - தெய்வக்குரல்-பரதத்துவத்தின் பேருருவம். என்னுள்ளே ஆன்ம விளக்கேற்றினர் அவர். நான் வளர்ந்து அவரது பேரருளே உணர்ந்தபோது எனது நன்றியை ஏற்றுக் கொள்ள அவர் பூத உடலில் இல்லை. இந்த நஷ்டம்-நன்றிக்கடன் தீர்க்காதது என்னை மேலும் துயரத்தில் ஆழ்த்தியது. பல ஆண்டுகள் வரை அதனின்று மீளும் வகை காணாதிருந்தேன்.

ஸ்ரீ ஜகத்குரு அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமி விஜய யாத்திரையின்போது அவரைக் கண்டு வணங்கினேன்; அவரை நெருங்க வழியில்லை. ஏனெனில் எப் போதும் அவரைச் சுற்றிக் கூட்டம். பலமுறை முயன்றேன். தோல்வியுற்றேன். ஆண்டுகள் பல ஓடின. எனது துயர் தீரும் வகையில்லை.

திடீரென்று ஒரு சந்தர்ப்பம். ஸ்ரீ ஜகத்குரு அவர்கள் ஏதோ ஒரு கையெழுத்துப் பிரதியைப் பரிசீலித்துக்