பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

கொண்டிருந்தபோது என்னைப் பற்றிய விவரங்களே அறிந்தார். உடனே எனக்கு அழைப்பு வந்தது. இரண்டே நாட்களில் அவரது முகாமை அடைந்தேன்.

ஜகத்குரு அவர்கள் விஜயவாடாவில் தங்கியிருந்தார். கன்யகாபரமேசுவரி சத்திரத்தின் முதல் மாடியில் இருந்தார். காலை 8-30 மணிக்கு எனது நண்பருடன் அங்கு சென்றேன்.

எனது நண்பர் சிறிது பின்னே நின்றார். அறிமுகமான ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். நான் சத்திரத்துள் புகுந்தேன். மாடிப்படி ஏறினேன். நிமிர்ந்தேன். ஸ்ரீ ஜகத்குரு அவர்கள் கீழே இறங்கினர். அது கண்டு நான் படிகளை விட்டு இறங்கித் தரையில் நின்றேன். ஜகத்குரு வந்தவுடன் அவர்தம் கால்களில் விழுந்து வணங்கினேன். அவர் என்னே உற்று நோக்கினர். எழுந்திருந்த என்னைப் பெயர் சொல்லி அழைத்தார் அவர். யாரும் என்னை அறிமுகம் செய்யவில்லை. எனது நண்பர் ஆச்சரியப்பட்டார். ஆனல் அது எனக்குப் புதிய அநுபவம் அன்று.

ஜகத்குருவின் முகாமில் சில நாட்கள் தங்கியிருந்தேன். ஆயுட்காலம் முழுவதும் பழகியது போன்ற பராமரிப்பு எனக்களித்தார் ஜகத்குரு. என் மனத்தில் அழுத்திக் கொண்டிருந்த துக்கத்தை அவருக்குத் தெரிவித்தேன். அவர் எனக்கு ஆறுதல் கூறினர். அவர் சந்நிதியில் ஒரளவு ஆறுதல் ஏற்பட்டது போல் தோன்றியது. அவரது முகாம் வேறு ஊருக்கு நகர்ந்தது. நான் ஊர் திரும்பினேன். துயரம் என்னுடன் வந்தது. சந்திர