பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சரித்திர பொக்கிஷம் நிறைந்த இடம் சிருங்கேரி, வேத வேதாந்தப் பயிர் விளைக்கும் பண்ணை. எண்ணரிய தாக்குதல்களுக்கும் ஈடுகொடுத்துத் தலைநிமிர்ந்து நிற்கும் கலாசாரமுடையது.

சென்றுபோன நாட்களிலும் சரி, இனி வரப்போகும் நாட்களிலும் சரி இதைப் போன்றதொரு சாம்ராஜ்யத்தைக் காணல் இயலாது என்று வியக்கத்தக்க விஜயநகர சாம்ராஜ்யம் தோன்றக் காரணமாயிருந்த வித்யாரண்ய மகாமுனிவர் வாழ்ந்த இடம் சிருங்கேரி.

விஜயநகர சாம்ராஜ்யப் பெருமையை இந்த நாடு இன்னமும் மறக்கவில்லை. அந்த சாம்ராஜ்ய நினைவு கவினுறும் துங்கை நதிக் கரையளவில் நின்றுவிடவில்லை.

ஸ்ரீ சங்கர பகவத் பாதர் சிருங்கேரியிலே பன்னிரண்டு ஆண்டுகள்தான் இருந்தார் என்றோ பல நூற்றாண்டுகள் முன்பே மறைந்தார் என்றே சிருங்கேரி வாழ் மக்கள் நினைக்கவில்லை.

துங்கை நதியும் அதன் இனிய காற்றும், வானோங்கி வளர்ந்துள்ள காடுகளும், பசுமை பரக்கக் காட்சி தரும் உயர் சிகரக் குன்றுகளும் ஸ்ரீ சங்கர பகவத் பாதரின் பெருமையை ஒதக் காண்பீர்கள்.

இந்திய நாட்டின் மிகச் சிறந்த செல்வமாகிய அத்யாத்ம தர்மம் இங்கேதான் பாதுகாக்கப்படுகிறது. பரம்பரை பரம்பரையாகப் பேணி வளர்க்கப்படுகிறது.

அந்த சேஷத்திரத்தின் பெருமைமிகு மெஞ்ஞானம் ஆன்மிக நேயர்களையும், கலாசாரப் பண்புடையோரை-