பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பள்ளிக்கூடங்களுக்கு விளையாட்டு மைதானங்கள் இல்லை. வருஷத்தில் ஆறு மாதம் விடாமழை பொழியும். ஆதலால் விளையாட நேரம் இராது. மீதியுள்ள ஆறு மாதம் படிப்பிலும் பரீட்சையிலுமாகச் சென்றுவிடும். ரிஷ்ய சிருங்கர் இருந்த இடமல்லவா! மழை பெய்யக் கேட்பானேன் !

ஆடம்பர வாழ்வு வாழ்வதற்கு வழி செய்யும் நவீன ஆங்கிலக் கல்வியின் கவர்ச்சி ஒருபுறம் இருப்பினும் பழைய முறையில் வேதமும் சம்ஸ்கிருத பாடமும் கற்பிக்கும் குருகுல பாடசாலையில் ஏராளமான பேர் படிக்கின்றனர்.

கால் நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது அதிகமான மக்கள் சிருங்கேரியில் வாழ்கிறார்கள். அந்த நாளிலே ரோடுகள் இல்லை. இப்போது தார் ரோடுகள் உள்ளன. தபாலாபீஸ், தந்தி ஆபீஸ், டெலிபோன் எக்ஸ்சேஞ்ஜ் முதலிய எல்லாம் வந்துவிட்டன. மின்சார விளக்குகள் எரிகின்றன. குடி தண்ணிர்க் குழாய்கள் காட்சி தருகின்றன. நீண்டதொரு கடைவீதி, உடுப்பி காப்பிக் கடைகள் சில. துணி வெளுத்துத் தரும் கடைகள் சில. முனிசிபாலிடி ஆபீஸ். சிண்டிகேட் பாங்கு, ஓர் உயர்நிலைப்பள்ளி. பஸ் ஸ்டாண்டு இவைதான் சிருங்கேரியின் நவீன வசதிகள்.

படித்தோர் வேலையில்லாமை அங்கில்லை. எல்லாரும் திருப்தியுடனிருக்கின்றனர். சமூக அரசியல் மாறுதல்