பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

வேண்டுவோர் எவருமிலர். தேர்தல் பரபரப்பும், அரசியல் கொந்தளிப்பும் அந்த இடத்தின் முனையைக்கூட எட்டவில்லை.

சிருங்கேரியிலே ஆன்மிக காரியங்களில் அதிகாரம் செலுத்துவது கிடையாது. ஜனநாயக உணர்ச்சிக்கே முதலிடம். ஜகத்குரு பாரம்பரியம் என்பது குடும்பச் சொத்து அன்று. உறவு முறை என்ற காரணத்தாலோ வேறு எந்தக் காரணம் கொண்டோ பீடாதிபதிகளேத் தேர்ந்தெடுப்பது இல்லை. பீடத்தை அலங்கரிக்கும் தகுதி உடையவர் எவரோ அவரே பீடாதிபதியாகத் தேர்ந் தெடுக்கப்படுவார். தகுதி வாய்ந்ததவர்களே சிருங்கேரி பீடத்தை அலங்கரித்து வந்திருக்கிறார்கள்.

தற்போதைய பீடாதிபதி எதிர்பாராத முறையில் இளம் வயதிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். சிறு வயது முதலே ஆங்கிலத்தின் மீது வெறுப்பு. பல ஆண்டுகள் தமது குருபாதங்களில் சேவை. கல்விப் பயிற்சி. தமது குருநாதர் பூத உடல் நீத்தபோது வருந்தியது - பாரத தேசம் முழுவதும் விஜய யாத்திரை செய்து வெற்றிக் கொடி நாட்டித் திரும்பியது இவை யாவும் நாடறிந்த விஷயம்.

அவரது திறமை, அறிவாற்றல், திண்மை முதலியன பற்றிய பல்வேறு சம்பவங்களே பக்தர் குழாம் நன்கு அறியும்.

எளிமை, தன்னடக்கம், உள்ளன்பு முதலிய யாவும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர் அவர். விஜய யாத்திரை-