பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

யின் போது லஷோப லக்ஷம் மக்கள் வந்து அவரை வணங்கினார்கள். சாதாரண ஏழைக் குடியானவர் முதல் இந்த நாட்டின் ஜனாதிபதி வரை எல்லோரும் வந்து அவரை தரிசித்தனர். ஒவ்வொருவரையும் அவரவர் தம் நிலைக்கேற்ப வரவேற்று விசாரித்துப் பேசி புன்முறுவல் பூத்து அவர் அனுப்பிய முறையும் பிறவும் அவரது எளிமையையும் திறமையையும் அறிவாற்றலையும் நன்கு காட்டின. அவரது புன்முறுவல் பூத்த தோற்றம், பரிவு முதலியன மக்களைப் பரவசப்படுத்தின. அவர்பால் சென்று உரையாடித் திரும்புவோர் ஒவ்வொருவரும் முன்னிலும் பன்மடங்கு அறிவு விளக்கம் பெறுவர்.

சங்கர பகவத் பாதருக்குப் பின் பல நூறாண்டுகள் கழித்துத் தற்போதைய சிருங்கேரி ஜகத்குரு நாடு முழுவதும் விஜய யாத்திரை செய்துள்ளார். புது டில்லியிலே அவர் முகாம் செய்தபோது ஜனாதிபதி டாக்டர் ஜாகீர் உசேன் வந்து வணங்கினார். ராஜரிஷி டாக்டர் ராஜேந்திர பிரசாத், பிரும்ம வித்யா பாஸ்கர டாக்டர் ராதாகிருஷ்ணன் முதலியோரும் ஜகத்குருவுடைய ஆசி பெற்றவர்களே. காஷ்மீரத்திலும், நேபாளத்திலும் நமது ஜகத்குருவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு சங்கர பகவத் பாதரின் விஜயத்தை நினைவூட்டின.

இவரது விஜயத்தால் இந்திய நாட்டின் தார்மீக, ஆன்மீக எண்ணங்கள் புத்துயிர் பெற்ருலும் பெரு விட்டாலும் ஒன்று நிச்சயம். அதாவது இந்திய நாட்டின் தற்கால சரித்திரத்திலே முக்கியத்துவம் பெற்று விளங்கும்.