பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

களில் காட்சி தருகின்றன. சங்கரரின் சாதனை எவ்வளவு மகத்தானது என்பதை அறியாமல் ஒருவன் ஹிந்து என்று பெருமைப்பட்டுக் கொண்டால் அதற்கு அர்த்தமே இல்லை. உலகின் எந்த நாட்டிலும் சரி, எந்தக் காலத்திலும் சரி, தோன்றிய தத்துவ மலர்களிலே சிறந்த மலர் அவர். அவருக்குப் பின் வந்தவர்கள் அந்த மரபு வழுவாமல் காத்து வருவதை சிருங்கேரி ஆலயங்களில் காணலாம்.

நவீன நாகரீகம் தீண்டாத பண்டித விற்பன்னர்களால் - எளிய, கள்ளமற்ற - தெய்வபக்தி மிக்கவர் களால் இவை நிர்வகிக்கப்படுகின்றன.

ஆலயங்கள் தெய்வ சாந்நித்யம் பெற்றவை; ஆகம விதிப்படி யந்திர நிர்மாணம் செய்யப்பட்டவை. விதி முறை வழுவாது பூஜை செய்து வந்தால் வருஷம் ஏற ஏற தெய்வ சாந்நித்யம் பெருகும்.

மனிதர் தம் மனோநிலைக்கு ஏற்ற வகையில் பல்வேறு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. பல்வேறு மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அமைதியான சுபாவம் உடைய ஒருவருக்கு பிரதாப வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஈடுபாடு வராது. தஷிணாமூர்த்தி மீதோ, ராமன் மீதோ, சிவன் மீதோ தான் ஈடுபாடு ஏற்படும். பல்வேறு தீர்த்தங் களில் பல்வேறு மூர்த்திகள் உள்ளன. ஒவ்வொரு தீர்த்தமும் ஒரு குண விசேஷச் சிறப்புடன் விளங்கும். ஒவ் வொரு மூர்த்திக்கும் ஒரு சிறப்புண்டு. அவ்வாறு சிறப்புப் பெற்ற மூர்த்திகள் மக்களின் ஆன்மிக உணர்வைத் தூண்டும். பாடல் பெற்ற ஸ்தலங்கள் எல்லாம் இம்முறையில்தான் அமைந்துள்ளன . நூற்றுக்கணக்கான ஆண்டு-