பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

சாரதாதேவி ஆலயத்திள் ராஜகோபுரம் ஒன்று தவிர வேறு எவ்வித மாறுதலும் இல்லை.

முன்பு போலவே அந்த நதி அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. எவ்வித பங்கமும் இல்லாமல் மீன்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. மீன் காட்சிச் சாலையோ என்று ஐயுறும் வண்ணம் அந்த ஆற்றின் தெள்ளிய நீர் தோற்றமளித்தது.

பசுமையான பின்னணியிலே தோன்றிய அந்த மரப் பாலம் இப்பொழுதும் இருந்தது. ஆனல் சிறிது இடம் மாறியிருந்தது.

நாற்புறமும் சூழ்ந்துள்ள மலைகளிலே ஓங்கி வளர்ந்து வரிசை வரிசையாக நின்ற மரங்கள் அதே பழைய காட்சி வழங்கின. மாறுதல் இல்லை.

அமைதியான அந்த ஆற்றின் தோற்றமும், கம்பீரமாக நிற்கும் அந்த மலைகளின் காட்சியும் என்னைக் குலுக்கின; எலிவளை வாழ்க்கையினின்று எழுப்பின; நீண்ட காலமாக மறந்துவிட்ட விரிந்து பரந்து அகண்டாகாரமாய் விளங்கும் லஷிய வாழ்வெனும் மண்டப வாயிலுக்கு உந்தித் தள்ளின.

சமூக சூழ்நிலையிலிருந்து விடுபட்ட உணர்ச்சி என்னை ஆட்கொண்டது. சமூகத்தின் ஆபாச-கீழ்த்தர -அற்ப உணர்ச்சிகள் எல்லாம் மறைந்தன; மங்கின; முற்றும் நீங்கின. உள்ளத்திலே உறைந்து கிடந்த திருப்தி மனப் பான்மை திடீரென்று தலை காட்டியது. அந்தச் சூழ்நிலை-