பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கட்டினேன். கீழே விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன். அவர் புன் முறுவல் பூத்தார். எனது வளர்ப்புப் பெற்றோர்களும் நமஸ்காரம் செய்தார்கள். அவர் அவர்களைத் திருப்பி நோக்கினர். புன் முறுவல் செய்தார். கன்னடத்தில் சில கேட்டார். அவர்களும் இரண்டொரு வார்த்தையில் பதில் கூறினர்கள். அடுத்து என்ளே நோக்கினர். அன்பு கனிந்த குரலில் புன்னகை அரும்பக் கேட்டார் தெலுங்கிலே 'எந்த ஊர்' என்று. எனது சொந்தப் பிரதேசத்திலிருந்து எட்டியுள்ள மற்றோரு பாஷைப் பகுதியிலே இந்த மாதிரி எனது தாய் மொழியிலே ஒருவர் கேட்டது என்னைத் திடுக்கிடச் செய்தது, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகர பாரதி மகாஸ்வாமி எதிரில் இருப்பதுணர்ந்தேன். அடங்கி ஒடுங்கினேன். பயபக்தியுடன் பதில் கூறினேன். மகாஸ்வாமிகள் புன் முறுவல் பூத்தவண்ணமிருந்தார்கள். ஏதும் பதில் பேசவில்லை. அவரது மெளனம் பொருள் பொதிந்து விளங்கியது. நான், முற்றும் மாறியதோர் வாலிபனக விளங்கினேன். 'நீங்கள் போகலாம்’ என்று விடை கொடுப்பது போல் தலையசைத்தார். எனது வளர்ப்புப் பெற்ருேரை நோக்கி. தம்மைப் பின்தொடருமாறு என்னே நோக்கித் தலையசைத்தார். நானும் பயபக்தியுடன் சற்றுத் தொலைவில் தொடர்ந்தேன். அதுவரை நின்று கொண்டிருந்த ஏவலரும் பின் வந்தார்.

மகாஸ்வாமி வசிக்கும் சச்சிதானந்த விலாச ஆசிரமத்திலே புனிதமானதோர் அறையினுள் புகுந்தோம். அங்கே ஒரு மூலையில் குரு பாதுகைகள் இருக்கக் கண்டேன். விழுந்து வணங்கினேன். எனது செயலை