பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

6. புதிய அருட் பிரசாதம்

கத்குரு அவர்கள் வெளியே வந்து தீர்த்தம் வழங்குவார் என்று எதிர்பார்த்த வண்ணம் சச்சிதானந்த ஆசிரமத்திலே பெருங் கூட்டம் கூடியிருந்தது.

பூஜைப் பெட்டி வெளியே இருந்தது. வழக்கமாக நடைபெறும் பூஜைகளை முடித்து விட்டார்கள்.

நமஸ்காரம் செய்துவிட்டுப் பூஜைப் பெட்டி எதிரே உட்கார்ந்து கொண்டு மூர்த்திகளை நோக்கியவண்ணம் இருந்தேன்.

இந்த மூர்த்திகள் தான் இந்திய நாகரிகத்தின் உருவகம்; அறிகுறி. நாகரிகமும் தத்துவமும் ஒன்றுக் கொன்று இணைந்தவை. இவ்விரண்டின் சாரமே கலாசாரம். இந்திய தத்துவம் என்னும் கழனியிலே மலர்ந்தது தான் இந்திய கலாசாரம்.

இந்திய தத்துவமும் பிறவும் ஈடுகாட்ட முடியாதவை. அவை வளர்ந்து கொண்டே இருக்கின்றன. மனித சமுதாயத்துக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஒரே அறிகுறி ஹிந்து தத்துவம்தான்.

மனித சமுதாயத்துக்குத் தான் செய்ய வேண்டியவைகளே செய்யாமல் ஹிந்து தத்துவம் நழுவுதல் இல்லை. ஜகத்குரு இந்த ஆசிரமத்திலிருந்து அருள் புரிகிறார். மனிதன் தர்மத்திலிருந்து நழுவாதிருக்கச் செய்கிறார். அவனது பிரச்னைகளுக்கு முடிவு காண அருள் புரிகிறார்.