பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு மகாசமஸ்தானம்

சாரதா பீடம், சிருங்கேரி.

சிருங்கேரி போஸ்டு - கடூர் (மைசூர் ராஜ்யம்)


சிருங்கேரி
11-1-69

ஸ்ரீ சக்திதாஸ்,

ஸ்ரீ ராமலிங்கேசுவர ராவ் ஆங்கிலத்தில் எழுதிய "மீண்டும் சிருங்கேரி சென்றேன்’’ என்ற புத்தகத்தைத் தாங்கள் தமிழில் மொழி பெயர்ப்பதாகவும், தியாகராய நகர் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ வித்வான் கனபாடி சூரியநாராயண பட்டர் அதை விரைவில் வெளியிடுவதாகவும் ஸ்ரீ ஜகதகுரு மகாசந்நிதானம் அவர்களிடம் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

தமிழ் படிக்கும் மக்கள் ஆதிசங்கரர் பற்றியும் அவர் தம் அத்வைதக் கருத்துக்கள் பற்றியும் சிருங்கேரி பற்றியும் அறிந்துள்ளவற்றை மேலும் வளர்க்கப் பெருந்துணை புரியும் இப்புத்தகம் என்று கருதி ஸ்ரீ ஜகத்குரு மகாசந்நிதானம் அவர்கள் உளம் மகிழ்ந்து தாங்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று அருள் புரிந்துள்ளார்கள்.

தங்களுக்கு வெற்றியும், நூல் வெளியிடுபவரான ஸ்ரீ சூரியநாராயண பட்டருக்குச் செழுமையும் ஏற்படுமாறு ஸ்ரீ ஜகத்குரு மகாசந்நிதானம் அவர்கள் திருவுளம் கொண்டுள்ளதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசீர்வாத மந்திராட்சதையும், ஸ்ரீ சாரதா சந்திர மெளளீசுவர பிரசாதமும் அனுப்பப்பட்டுள்ளன.

தங்கள்,
கே. கிருஷ்ண பட்டர்,
அந்தரங்க காரியதரிசி.