பக்கம்:மீனோட்டம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி தென்காசியிலிருந்து குற்றாலத்துக்குப் போகும் சாலை வழி பஸ்ஸில் 1520 நிமிடங்கள். மாலை வேளையில் தன். யாக அரைமணியோ, ஒரு மணியோ, இன்னும் எத்தனை கடுதலோ, அது நடப்பவனின் இஷ்டம் நடக்கும் சமயத்தில் அவனது மனநிலை. நடந்து கொண்டிருந்தேன். சீஸன் மும்முரம், ஆனால் நான் சீசனுக்கு வரவில்லை, தென்காசிக்கு மாற்றலாகி வந்திருந்தேன். வந்த புதுசு வீடு பார்த்துப் பேசி அமர்த்திப் பிறகு குடும்பத்தை வரவழைத்துக் கொள்ளணும். வந்து கிட்டத்தட்ட மாதமாகியும் இன்னும் இங்கு எனக்கு நிலை படியவில்லை. உத்தியோகத்தில் மாற்றலாகி வந்தவன். ஏற்கனவே இருப்பவருக்கு அவநம்பிக்கையானவன் தான். எத்தனையோ மானேஜர்கள் வந்தார்கள், போனார் கள் பார்த்திருக்கிறோம். இத்தனை நாள் நம் வழியில் தும்பு தட்டாமல் போய்க் கொண்டிருக்கிறோம். வந்தவன் நம் வழியில் படிவானா? அல்லது நம்மை ஆட்டி வைப்பானா? அவர்கள் கவலை இதுதான். அதுவும் புதிதல்ல. யாரும் பாதை மாற விரும்புவதில்லை. கலைஞன், எழுத்தாளன், லட்சியவாதி-இவர்களைப் பார்க்கையில் எனக்கு ஒரு பக்கம் பரிதாபம், ஒரு பக்கம் சிரிப்பு. ஆரம்பத்தில் எல்லோரும், கங்கையின் கதியைத் திருப்பும் எண்ணத்தில்தான் இறங்குகிறார்கள். கடைசியில் கங்கையிலேயே பிணமாக மிதந்து செல்கிறார்கள். அப்பவும் மீ1ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/10&oldid=870174" இலிருந்து மீள்விக்கப்பட்டது