பக்கம்:மீனோட்டம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனம் ls)} உள் இமையில் அவள் ஏற்கெனவே நின்று திரிக்கிறாள். இத்தனை நாள் காத்திருந்து என்னைப் பார்க்கத்தானே இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய்! அபிஷேகம் அந்த முடியிலிருந்து அந்த உடலில் வழிகை யில் அந்தந்த திரவியத்தில் பளபளக்கிறாள், ஜ்வலிக் கிறாள், மினுமினுக்கிறாள், மிளிர்கிறாள், ஒளிர்கிறாள், அங்கங்கள் பிதுங்குகிறாள், உள்ளத்தைச் சூறையாடுகிறாள். பாலருவி முகத்தை வெளிச்சமாக்கி, தோள்களில் வழிந்து, மார்க்குலையில் இழிந்து அடிவயிற்றில் அலைபிரிந்து, சொரிந்து பாதங்களை நோக்கி இறங்குகிறது. குருக்கள் பர பரவெனத் தண்ணிரைச் சொம்பு சொம்பாய்க் கொட்டி அலம்பி, சட்டென சிலையின் ஒரு கையில் ருத்ராr மாலை யும் மறு கையில் கமண்டலத்தையும் கொடுத்து விட்டார். ஆ என்ன நேர்ந்து விட்டது? தோற்றம் சட்டென மாறி விட்டது. தேவி திடீரென நீலச் சுடராகி விட்ட விந்தையை என்ன சொல்ல? அபிடேகப் போதின் வெகுளியும் சிரிப்பும் எங்கே? உடுக்கையும் மாட்டியாகி விட்டது. கன்யாகுமரி காஷாயினி. பதினாறு வயது பச்சிளம் பாலா (இப்போதுதான் அரும்பு கட்டிய ஸ்தன்ங்கள்) திடீரெனப் பழுத்த தபஸ்வினி. அவள் தவத்தில் அவள் காய்ந்து கணகணக்கிறாள். முகத்தில் தவத்தின் கடுப்பு. சீ-கிட்ட வராதே-என்னை யாரென்று நினைத்தாய்? நான் சிவசொத்து. வியப்பில் ஆழ்கிறேன். உமையைப் பிரிந்த சிவம் அங்கு இமயமலைச் சிகரத் தில் தவமிருக்கிறான். இங்கு தென் கோடியில் அவனை அடைய இவள் தவம் கிடக்கிறாள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட் டார்கள். யார் முன்னால் தணிவது என்று இருவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/102&oldid=870180" இலிருந்து மீள்விக்கப்பட்டது