பக்கம்:மீனோட்டம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை குவிந்த இதழ்கள் அவிழ்வது போலும், விழிப்பின் வருகையினுடனேயே, தன் உள்நினைவும் மலருவதை அவன் உணர்ந்தான். இரவினின்று புறப்படும் விடிவெளிச்சத்தில், இன்னமும் விழிகளைப் பொத்தியிருக்கும் இமைகளின் உள் புறம் வெள்ளை ரோஜாவின் வெண் சிவப்பில் தோய்ந்தது. தை பிறந்து விட்டது. விழிப்பு வந்தும் விழிக்க இன்னும் மனமில்லை. இச்சமயம் படுக்கையில் உடல் கிடக்கிற நிலையும், கிடக்கையின் வெத வெதப்பும் அவ்வளவு இதமாயிருந்தன. கீழே ஒரே சப்தம். வேலைக்காரி வீட்டை மெழுகிய இடங்களைப் பற்றி அம்மா அதட்டல் போட்டுக் கொண்டிருந் தாள். சமையல் கட்டில் காப்பிக் கடை நடந்து கொண்டிருக் கிறது. தம்பிக்கும் தங்கைக்கும் சண்டை. 'அம்மா, பட்டு காப்பியில் தண்ணைக் கலக்கிறாள் பாரேன்-' 'அப்படித் தான்-அம்மாவைக் கேட்டுண்டு தான் பண்ணினேன் போ-அடுப்பங்கரையில் புருஷாளுக் கென் னடா வேலை? காப்பி நன்னாயிருக்கா இல்லையான்னு பார்த் துக்கோ, அவ்வளவு தானே! தினந்தான் தண்ணைக் கொட் டிண்டிருக்கேன். இன்னிக்கு மாத்திரமில்லே, தெரிஞ் சுக்கோ-' "வாயாடாதேடி-இந்த வாயை வெச்சிண்டு புக்காத்துக் குப் போனா’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/104&oldid=870183" இலிருந்து மீள்விக்கப்பட்டது