பக்கம்:மீனோட்டம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}4 மீனோட்டம் சரி சரி; இன்னிக்கு சண்டை போட வேண்டாமே"அம்மா சண்டையைத் தீர்த்து வைக்கிறாள்- போருண் டாப்பா, இதுகளோடே அல்லாடறது! கல்யாணி கல்யாணி: கல்யாணி எங்கே-வாசல் குட்டிகளோடே சேர்ந்துண்டு கொளுத்தி விளையாடறதா? சொக்கப்பானையெல்லாம் நேத்தியோடே போச்சுடி-போய் மாமாவை எழுப்பு-' “шот......щоті” இதோ இன்னும் ஒரு நிமிஷத்தில் கல்யாணி வந்துவிடு வாள், மாடிப் படிகளில் குதித்துக் குதித்து ஏறிக்கொண்டுமை தீட்டிய விழிகளும், வளை குலுங்கும் கைகளும், வெந்நீரில் குளித்ததால்.சிவப்பு குழம்பிய முகமுமாய், மா-மா." என்று செல்லமாய்க் கத்திக் கொண்டே வந்து மார்மேல் விழுவாள். அவள் அப்படி விழும் முன்னமேயே, அவள் விழும் உணர்ச்சியை அவன் தினைவு அவ்வளவு வேகமாய்ப் பரு கிற்று. உடனே, வாய் வைக்காத புண் போல், விண்விண்? ணென, உள்ளத்தில் இராப் புகலாய்த் தெறித்துக் கொண் டிருக்கும் வேதனை அதன் வேலையைத் துவக்கி விட்டது. கற்பனையில், அவன் இன்னமும் கண்ணால் காணாத அவன் குழந்தை யின் உரு எழுந்தது. அங்கங்கே குழிகள் சுழித்து, கொழ கொழ வெனப் பால் வடியும் ஒரு உடல். தன்னைக் கொண்டு பிறந் திருக்குமா, அல்லது அதன் தாயைக் கொண்டு பிறந்திருக் குமா? தன் ப்ோன்ற்ே பூனைக் கண்கள் அதற்கும் இருக்குமா? அவன் தன் கற்பனையை அநுபவிக்கும் வேகத்தில், அவன் மேல் விழுந்தது அவன் குழந்தையே போலிருந்தது. உடல் ஒரு பயங்கரமான இன்பத்தில் புளகித்தது. கண்கள் திறந்தன. & to ۰۶ به این مسیر - 'மாமா-சங்கராந்தி வந்துடுத்து...ஏந்திரு ஏந்திருஎன் பட்டுப் பாவாடையை நீ பார்க்கல்லையே! ரெண்டு "டக்குப் போட்டிருக்கு. நுனியிலே லேஸ் வெச்சிருக்கு மாமா-' புன்னகை புரிந்த வண்ணம், அவளை ஒரு முறை இறுக அணைத்து, கீழே இறக்கி விட்டு-எழுந்தான். மூக்கைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/105&oldid=870185" இலிருந்து மீள்விக்கப்பட்டது