பக்கம்:மீனோட்டம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை ióš குடைந்து கொண்டு நச்சென ஒரு தும்மல் கிளம்பியது. உடனேயே, அதையடுத்து இன்னொன்று. சீ, இதென்ன மூணு மாதமாய்த் தீராத ஜலதோஷமாயிருக்கிறது, தெரிய வில்லை!’ மயிரைக் கோதிக் கொண்டு கீழே இறங்கினான். அம்மாவுடன் யாரோ ஒரு மாமி பேசிக் கொண்டிருந் தாள். “ஒரு வரன் இருக்கு. போத்தனூரில் மர வியாபாரம் பண்ணிண்டு இருக்கான் பையன். ஒரு இக்குப் பிடுங்கல் கிடையாது. தனிக்காட்டு ராஜா. பொண்ணைக் கையில் ஏந்தினாப் போலே வெச்சுப்பான்-' அம்மா அதற்குள் குறுக்கே வெட்டினாள். "அது மாதிரி சம்பந்த மெல்லாம் நம்பாத்துக்கு வேண் டாம் மாமி-என் பிள்ளையின் வேட்டகத்துக்குப் போய் வேணுமானால் அந்த மாதிரி சம்பந்தங்களைப் பிரஸ்தாபியுங் கள். அவா ரொம்ட சந்தோஷப் படுவா. என் பெண் நன்னா பெரிய குடும்பத்திலே வாழ்க்கைப் படனும்னு தான் இருக்கு, நாலு ஒர்ப்படிகள், அஞ்சு நாத்தனார், அஞ்சு மச்சினன்கள். மாமனார்-மாமியார் எல்லாரும் இருக்கணும். கொஞ்சம் அத்து மீறினால் வாயிலேயே போடற ஆம்படையானா இருக் கணும். நீங்களும் நானும் வாழ்க்கைப்பட்ட தெல்லாம் உங்களுக்கு இப்போ மறந்து போச்சா? தனி தனின்னு தனியைத் தேடி, தான் குட்டிச் சுவராய்ப் போறதோடில் லாமெ புகுந்த இடத்தையும், பொறந்த இடத்தையும் குட்டிச் சுவரா அடிச்சிண்டிருந்தோமா? சண்டையோ சமாதானழோ, சந்தோஷமோ துக்கமோ, நல்லதோ கெடுதலோ நம் குடும் பமும் இப்போ விளங்கிண்டு தானே யிருக்கு? நான் வாழ்ந் தாப்போலேதான் என் பெண்ணையும் வளர்த்திருக்கேன். அதுக்குத் தகுந்தாப் போல் அவள் வாழ்க்கைப் பட்டால் போறும்-' ‘அப்படின்னா இன்னொரு ஜாதகமிருக்கு-” பேசிக் கொண்டே அம்மாவும் அந்த மாமியும் நகர்ந் தார்கள். மீ-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/106&oldid=870187" இலிருந்து மீள்விக்கப்பட்டது