பக்கம்:மீனோட்டம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை 107 ஒடும் தினுசை எண்ணக் கூட மனம் வெட்கியது. ஆயினும் (அவளைப் பார்க்கையில், இவ்வளவு சாது முகம் இவ் வளவு சண்டித்தனத்தை மறைக்க முடியுமா என்று இன்னும் வியப்பாய்த்தான் இருக்கிறது, அனுபவ ரீதியாய்ச் சுட்டுத் தெரிந்து கொண்டும்-; அம்மாவும் அம்மாமியும் பேசிக் கொண்டு வெளியே வருகிறார்கள். வந்தவள் சொல்கிறாள். எல்லாம் பாருங்கோ மாமி, தை பிறந்துடுத்து; வழியும் பிறந்துடும். எல்லாத்துக்குமாத் தான் சேர்த்துச் சொல்லறேன்-' அவளை வாசல் வரை கொண்டு போய் விட்டு விட்டு அம்மா திரும்பி வருகிறாள். 'என்னடா அம்பி, மூஞ்சி ஒரு தினுசா வாங்கிக் கிடக்கு? உடம்பு சரியா யில்லையா? நெற்றிப் பொட்டில் கை வைக் கிறாள். ஏண்டா இந்த மாதிரி அசட்டு ஜூரத்தை மூணு மாஸ்மா வெச்சிண்டு வைத்தியனிடமும் காண்பிக்காமே... நாளும் கிழமையுமா...ஒரு காரியம் பண்றையா? சுந்தரா மாமியாத்துக்கு நேற்றுப் போயிருந்தேன்; ஒரு பிள்ளை ஜாதகம் தரேன் என்றாள். வாங்கிண்டு வா-' 冰 家 ※ சுந்தரா மாமி வீட்டுக்குக் கடற்கரை யோரமாய்ப் போகையில், மேலடிக்கும் இள வெய்யில், அவனை உறுத்தும் சிறு குளிருக்கு இதமாயிருந்தது. அவனுக்கே கடற்கரை யோரமாய் நடக்கப் பிடிக்கும். அதுவும் காலை வேளையில் வண்டி-காடிச் சத்தமும், ஆள் நடமாட்டமும் குறைந்து, இடமே ஒரு பூஜ்யத் தன்மையை அடைந்திருந்தது. அலை களின் சலசலப்புக் கப்பால் ஜலத்தின் அசைவற்ற நிலையில் உயிரும் அழகும் பொலிந்தன. மனம் ஏன் இத்தன்மையை அடைய மாட்டேன் என்கிறது? சூரியக்கிரண ஒளி சமுத்திர வெளியில் பட்டு, லட்சம் சிதர்களாய் ஜல மட்டத்தின் மேல் சிதறிக் கிடந்தன, துரத்தில் மணல் திட்டுக்களிடையில் ஒரு மனித உரு ஊர்ந்தது. ஆயிரம் கண்டு பிடித்தும் மனிதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/108&oldid=870190" இலிருந்து மீள்விக்கப்பட்டது