பக்கம்:மீனோட்டம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மீனோட்டம் விசுவயூபத்தில் எவ்வளவு அசக்தனான பிராணி! எதிரே ஒரு வலைச்சி இடுப்பில் குழந்தையும் தலைமேல் சோற்றுப் பானையுமாய் வந்தாள். அவன் குழந்தையுடன் பேசிக் கொண்டும் கொஞ்சிக் கொண்டும் வருகிறாள். அவன் கவனம் குழந்தைமேல்தான் சென்றது.) 'பூவ்வா-பூல்வா-' என்று கீழுதட்டைப் பிதுக்கிப் பிதுக்கி, எச்சில் கொப்பளிக்கையில் அது ஒரு விளையாட்டு! மூக்கு பாட்டுக்கு ஒரு பக்கம் ஒழுகிக் கொண்டே யிருந்தது. ஆனால் அடேயப்பா, என்ன வளர்த்தி: கல் பந்து போல் அவ்வளவு பெரியதாய், கனமாய், அழுத்தமாய், உருட்டி விட்டாற் போல்: தான் குழந்தையை வியக்கும் அதிசயத்தில், அவள் வழியை மறித்துக் கொண்டு அவன் நிற்பது கூடத் தெரிய வில்லை. அவள் முகத்தில் புன் சிரிப்பு தோன்றிற்று. தன் பிள்ளையின் கன்னத்தை நிமிண்டினாள். 'அய்யரைக் கேளுடி அரையனா-இடியாப்பம் வாங்கித் துண்ண' - அது வஞ்சனையில்லாமல் உள்ளங்கையை அகல விரித்து நீட்டியது. அதன் கையே ஒரு சிறு அப்பம் போலிருந்தது. அவனுக்கு ஆசைத் தாபம் பீறிட்டுக்கொண்டு வந்தது. “இப்படிக் கொடு-” அவளுக்குச் சந்தோஷமும் பெருமையும் தாங்க முடிய வில்லை. அவளிடுப்பிலிருந்து அவன் குழந்தையை வாங்கிக் கொள்வதற்காக அவன் பக்கமாய் அவள் சாய்கையில், அவள் மேலிலிருந்து வீசும் மீனின் நிணம் குடலைக் குமட்டிற்று. நினைவுகூட மங்கி, பின்னோக்கி நழுவியது. -இன்று மாதிரியிருக்கிறது; அன்றிரவு அவள் ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு அவனிடமிருந்து சற்று எட்ட நின்ற வண்ணம் தான் ஸ்நானம் பண்ணவில்லை யென்று... அச் சமயம் அவனைக் குழந்தைப் பாசம் ஒன்றும் இப் போது போல், குரல்வளையைப் பிடித்து அமுக்க வில்லை. ஆயினும் எண்ணப் பிடிபடாத ஒரு வெற்றி யுணர்ச்சி உள் ளத்தில் கிளர்ந்தது. இப்படித்தான் எல்லோருக்கும் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/109&oldid=870192" இலிருந்து மீள்விக்கப்பட்டது