பக்கம்:மீனோட்டம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i0 மீனோட்டம் சொர்க்கத்துக்கல்ல, கங்கையில் முதலையின் வாய்க்கு. ஒட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை. மதுரை தாண்டியதுமே, இங்கு மக்களின் உணவுப் பழக்கம், காலை பலகாரம், மதியம் சாதம், இரவு பலகாரம். ஊர் மக்கள்படி ஒட்டல். மூன்று வேளையும் மிளகாய் நெடி நினைத்தாலே குடல் ஆவி கக்குகிறது. அதுவும் இப்போது சீசன் பணம் பண்ணும் வேளை, பண்டங்கள் மோசம். விலைகள் பற்றி எரிகின்றன. ஆனால் யாருக்கு அக்கரை? யாருக்கு இறக்கம்? அருவியில் குளிக்க எவனெவனோ எங்கிருந்தோ வருகிறான். சீஸனில்’ அருவியில் குளிப்பதுதான் அந்தஸ்த்தின் சின்னம். இந்த மூன்று மாதச் சூறையில்தான் குற்றாலம் வருடத்தில் மிச்சத்தை வாழ வழி தேடிக் கொள்கிறது. இப்போ வாழத் தெரியாதவன் வாழ லாயக்கற்றவன். பொழுது போக்குக்கோ, மனமாறுதலுக்கோ உகந்த புத்தகங்கள் கிடையா இருக்கும். ஒரே லைப்ரரியில், மானங் குலைந்து உடலும் பழகிப் போன ஸ்திரீ போல், பக்கங்கள் பாழாகி, உருக்குலைந்து இன்னும் தூக்கியெறியாமல், பேருக்கு அடுக்கி வைத்திருக்கும் பத்தாம்பசலிப் புத்தகங்கள். பேச்சுக்குத் தேடிப் போகும் அளவுக்கு எனக்கு இன்னும் நட்புகள் வாய்க்கவில்லை. அதற்கு முதல் நிபந்தனை சீட் டாட்டம் எனக்கு அறவே தெரியாது. இந்த அறியாமைக்கு இப்போது தலையிலடித்துக் கொண்டு என்ன பயன்? ஆனால் அடித்துக் கொள்கிறேன் 'நாலு பேருடன் பழகி பிஸினஸ்ஸை விருத்தி பண்ணத்தான் மானேஜர். நாலு பேருடன் பழகணும்னா நாலும் தெரிஞ்சுதான் இருக்கணும். நாலு என்ன நாற்பது-என்ன சொல்றது புரியறதா?” அதிகாரிகள் சொல்லியனுப்பித்து விட்டிருக்கும் புத்திமதி: உத்தியோகத்தைக் காப்பாற்றிக் கொள்ள. தனிமையின் உண்மையான தன்மையை உணரத்தான் இங்கு வந்து மாட்டிக் கொண்டேனோ? வேணும் போது பூணி, வேணாத சமயத்தில் கழட்டி யெறியக் கூடிய தனிமைதான் பாந்தமாயிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/11&oldid=870194" இலிருந்து மீள்விக்கப்பட்டது