பக்கம்:மீனோட்டம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை #09 குமோ? ஒற்றுமையுள்ள தம்பதிகளாயிருந்தால், இவ்விஷ யத்தில் வெற்றி, தோல்வியைப் பற்றிச் சிந்திக்க ஒன்று மில்லை. - ஆயினும் அவன் உணர்ந்த பெருமிதம் அவனையும் மீறி முகத்தில் தெரிந்து விட்டதோ, என்னவோ? என்ன சிரிக்கறேள்?" அவன் முறுவல் சின்னமும் அகல முகத்தில் படர்ந்தது. சாவகாசமாய் எழுந்து நடந்து அவளிடம் சென்று கழுத்துக் குப் பின்னால் கை கொடுத்து சாட்டையாய்த் தொங்கும் பின்னலைப் பிடித்து இழுத்து முகத்தை நிமிர்த்தினான். 'ஏன், அழனுமா?” அவனுடைய செல்லப் பிடியை உதறினாள். அவன் முகம் கடுகடுத்தது. - 'எனக்கு ஒண்னும் பிடிக்கல்லே...' "என்ன பிடிக்கவில்லை? நான் தொடுவதா?” “எல்லாந்தான் ஒண்னும் பிடிக்கல்லே.” “கர்ப்பினியோ துர்க்குனியோ என்று இப்பவே-” "ஆமாம், என்ன குழந்தை வேண்டியிருக்கு? எனக்கு நினைக்கவே பயமாயிருக்கு, இந்த மாசங்களெல்லாம் எப்படித் தள்ளப் போறேன்னு; நாலு பேர் சிரிக்க......” அவள் எண்ணங்கள் ஓடும் விதமே அவனுக்குப் பிடிக்க வில்லை. அவைகளின் அர்த்தமும் நன்றாயில்லை. இருந்தும் அவள் வாயினின்று வரும் பதில்களின் பொறுமை அவனுக்கே வியப்பாயிருந்தது. "அப்படியானால், நீ உலகத்தையே குற்றம் சொல்ல வேண்டியது தான். உலகத்தில் எல்லாமே இப்படித்தான் பிறக்கிறது. இயற்கையே இது தான் சேச்சே...இந்த மாதிரி எண்ணங்களை விட்டு விடு ராஜம்-’ சின்னக் குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கினாள். "ஆமாம் இன்னும், நாலஞ்சு மாலம் போகட்டும்; ரொம்ப நன்னா யிருக்கும்...” 'ஏன் நன்னா யிருக்காது? உனக்கும் எனக்கும் என்று முடிச்சோ விழுந்தாச்சு, இனிமேல் நீ யாருக்கு நன்னா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/110&oldid=870196" இலிருந்து மீள்விக்கப்பட்டது