பக்கம்:மீனோட்டம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! {{} மீனோட்டம் யிருக்கணும்? எனக்கு எல்லாம் நீ நன்னா யிருப்பாய்...” "ஆமாம், நமக்குள் இருக்கிற ஒற்றுமைக்குக் குழந்தை ஒண்ணுதான் பாக்கி......” கோபத்தால் அவனுக்கு விழி நரம்புகள் குறு குறுத்தன. “சரி, அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்...” "எப்படி?” "நம்மிருவருக்கும் ஒற்றுமையில்லையென்று. இப்பொழுது இது உன் கொட்டத்தை அடக்குமல்லவா? இந்தப் பந்தத் துக்கு நீ மசிந்து தானே ஆக வேண்டும்?” 'ஒஹோ! அப்படியா? அப்பொழுது அவள் உதட்டை முறுக்கிக் கொண்டு ஒலித்த ஒஹோ’வில் எவ்வளவு அர்த்தம் இருந்தது என்று அப்பொழுது புரியவில்லை; இப்பொழுது புரிந்தது என்ன சாமி, கல்லா சமைஞ்சுட்டே கொளந்தையைக் கொடு...என்னய்யரே உனக்கு இப்படித் தூக்கி வாரிப் போடுது? "ஒண்னுமில்லே- இந்தா...குழந்தைக்கு இடியாப்பம் வாங்கிக் கொடு.” அவள் போன திக்கைப் பார்த்துக் கொண்டு வெகுநேரம் நின்றான். அவன் இன்னமும், பிறந்தது முதல் கண்ணால் காணாத அவன். குழந்தையைக் காணும் வரை, வாசலில் காணும் எந்தக் குழந்தையும் அவன் குழந்தையாகவே இருக் கலாம். அதை நினைக்கையில், அவன் இதயம் குழம்பாய் உருகுவது போல் சுட்டது. 岑 冷 家 'வா-வா அம்பி! இந்தப் பக்கமே நீ இப்போ திரும்பிப் பார்க்கிறதேயில்லை...... இதோ பாருங்கோ, யார் வந்திருக் கான்னு...” - சுந்தரா மாமியின் அகத்துக்காரர் சமையலறையிலிருந்து ஒரு கையில் வெண்கலப் பானையையும், இன்னொரு கையில் கடுகு டப்பாவையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார். அவனைப் பார்த்துச் சிரித்தார். அவனைப் பிடிக்காதவர்களே யில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/111&oldid=870198" இலிருந்து மீள்விக்கப்பட்டது