பக்கம்:மீனோட்டம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை 11 'வா அப்பா, உட்கார் என்ன ரொம்ப இளைத்துப் போயிருக்கிறாய்? ஒரு சொம்பு கொட்டிக் கொண்டு வந்து விடுகிறேன். இந்தா சுந்தரா, நீ கேட்ட சாமான்...” 'இதென்ன...கடுகு டப்பாவுக்கு இப்போ என்ன அவசரம்? மஞ்சளும் கயிறும்னா கேட்டான். சாமியலமாரி யில் வெச்சுட்டுப் போயிருக்கிறதாக சாஸ்திரிகள் சொல் லிட்டுப் போனார். நீங்கள் உங்கள் காரியத்தைப் பாருங்கோ. அம்பியை எடுத்துக் கொடுக்கச் சொல்றேன்.” அவன் பசு மஞ்சள் கொத்தையும் கயிற்றையும் அவளிடம் கொண்டு வந்து வைத்தான். "என்ன மாமி, உங்கள் கால் எப்படி இருக்கிறது?’’ மாமி கயிற்றின் ஒரு துனியை அவனிடம் கொடுத்து விட்டு, இன்னொரு நுனியால் இழுத்துப் பிடித்துக் கொண்டு பசு மஞ்சளைக் கொத்தினின்று பிடுங்கி, கயிற்றில் சாயம் ஏற இன்னொரு கையால் தேய்க்க ஆரம்பித்தாள். ‘என் கால்தானே? அப்படியேதான் இருக்கு, மூனு வருஷமாய் ஆறாத புண் இப்போ திடீர்னு ஆறிடுமோ? இல்லாட்டா எப்போவாவது தான் ஆறப் போறதா?” 'ஏன் மாமி, அப்படிச் சொல்லுகிறீர்கள்?’ மாமி புன்னகை புரிந்தாள். நம்பிக்கை அறுந்து போன அவள் வாழ்வின் சோகம் அத்தனையும் அதில் தேங்கியிருந் தது. "ஏன் அம்பி.நீயும் எல்லாரையும் போல் வேஷம் போடறே? புண்ணின் புரையோ முழங்காலுக்கு மேலே ஏறிப் போயாச்சு, எனக்கே தெரியறது. அதனால் நான் இனிமேல் என் கவலையைப் படறதை விட்டாச்சு, இதுதான் நான் இந்த சங்கராந்திக்குப் பண்ணிண்ட தீர்மானம். இனிமேல் நான் அழப் போறதில்லை; என் கவலையைப் படப் போறதில்லை; சந்தோஷமாயிருக்கப் போறேன், என்னா, அடுத்த சங்கராந்தி யை யார் கண்டா?” “torrust...” அவன் குறுக்கு வெட்டாமற்படிக்கு மாமி கையமர்த்தி இனாள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/112&oldid=870200" இலிருந்து மீள்விக்கப்பட்டது