பக்கம்:மீனோட்டம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 மீனோட்டம் ஆனால் விஷயங்கள் நடந்திருக்கிற தினுசைப் பார்த்தால் நீ எவ்வளவு பாபம் பண்ணியிருக்கே என்கிறதுதான் விளங்கறது.! உன் முகம் சிவக்கிறதில்லையா. உன் அகமுடையாளைப் பத்தி மூணாம் மனுஷாள் சொல்ல வாச்சே என்னு? எனக்குந்தான் சிவக்கிறது இந்த மாதிரி ஒண்ணுரெண்டு கோடாலிகள் முளைச்சு, எங்கள் வர்க்கத்துக்கே வாங்கி வெக்கற கெட்ட பேரை நினைச்சா. உன் குழந்தை சொர்ண் விக்ரஹம் மாதிரியிருக்காமே! கொழந்தைக்குச் சொந்தக்கார னிடம் நாய் மாதிரி வந்து விழாமல், இடுப்பில் தூக்கி வெச் சிண்டு ஊரெல்லாம் காண்பிச்சு, தடிச்சியாய்ச் சுத்தி வந்தால் இவளை எல்லாரும் இந்த மட்டுமாவ்து இருக்கையேன்னு கெளரவப் படுத்துவான்னு நெனைச்சுண்டு இருக்காளா? இந்த அசடை என்னன்னு சொல்றது?’ அவன் மார்புள் வாளைப் போட்டு அறுத்தது. மாமா கதவைத் திறந்து கொண்டு ஸ்நான அறையி விருந்து வெளி வந்தார். ஜலம் ஸ்படிகத்துளிகளாய் அவர் மார் மேலும் தோள்களிலும் நின்றது. "சுந்தரா, என் கைக் கடிகாரத்தைக் காணோமே!-” 'நான் எழுந்து தேடியெடுத்துக் கொடுக்க முடியுமா? சமையலுள்ளில் எங்கேயாவது வெச்சிருப்பேன். நேத்திக்கு சாதப் பதத்தை நிமிஷம் பாத்துக் கஞ்சி வடிச்சேளே!' "ஆமாம் ஆமாம்-’’ விசனம் நிறைந்த கண்களுடன் மாமி, அவர் சமைய லறையுள் போன வழியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "ஒரொரு நாளைக்கு நெனைச்சுக்கறேன், இப்படியே இவர் என் கையை எதிர்பார்க்காமே பண்ணித் தின்னுண்டு இருந்தால், ஒரு நாளைக்கு நானாப் பண்ணிப் போடறதையும் தான் சாப்பிடட்டுமே! சாமானையெல்லாம் கொண்டு வந்து என்னைச் சுத்தி வெக்கச் சொல்றேன். அவருக்கு ஒரு வேலைக்கு இரு வேலைதான்; ஆனால் என் ஆத்திரம்எனக்குத் தணிய மாட்டேன் என்கிறது. பண்ணியும் போடறேன். உட்கார்ந்த வண்ணம் ஏத்தியிறக்கி சுத்துக் காரியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/115&oldid=870206" இலிருந்து மீள்விக்கப்பட்டது