பக்கம்:மீனோட்டம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மீனோட்டம் படித்திருப்பான். ஆயினும் அன்று. சொல்லிக் கொடுத்தோ, சுயமாகவோ ஏதோ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை எனும் தினுசில் அவள் எழுதி யிருக்கும் அக்கடிதங்களில், அவள் மனத்தை அவன் அறிய முயல்கையில், அவள் அகந்தையின் உச்சமா, அல்லது ஆஸ்பத்திரிக்கேசா என்று அவனுக்கு இன்னமும் விளங்க வில்லை. சிற்சில சொற்களும் வாக்கியங்களும் நெருப்பில் பொறித் தது போன்று கடிதத்தில் துள்ளித் துள்ளிக் குதித்தன. -'நீங்கள்தான் குழந்தை குழந்தையென்று அடித்துக் கொண்டீர்களே யொழிய, நான் இதையொன்றும் விரும்ப வில்லை. இந்தக் குழந்தை பிறந்து இனி நானும் பிழைத் திருந்தால் பார்த்துக் கொள்ளலாம். இருந்தாலும் எனக்கு இதுவே சாக்காயிற்று-” இக்கடிதம் கிட்டியதும் அதன் அர்த்தமே விளங்கவில்லை. அவசர அவசரமாய் அவள் தந்தைக்கு அவளைத தன்னிடம் கொண்டு வந்து விட்டு விடும்படி எழுதினான். அதற்கு அவளிடமிருந்து பதில்:

இப்படியெல்லாம் அழைத்தால் நான் வந்து விடுவேனா? வாசவில் வண்டியை நிறுத்திக் கொண்டு, கையைப் பிடித்து இழுத்தாலும் வரமாட்டேன்... எங்கள் தெருவில் இருக்கும் சதிபதிகள் நீங்கள் என்னிடம் இருக்கிற மாதிரி இல்லை. கையைக் கோத்துக் கொண்டு, மாலை வேளையில் அவர்கள் உலாவப் போவதைப் பார்க்கையில் என் வயிறு எரிகிறது. ஒரு நாளைக்கு நாமிருவரும் தனியாய் ஒரு சினிமா வுக்குப் போனதுண்டா? இல்லை, எனக்கென்று நீங்கள் ஒரு சோப்பு, ஒரு ரிப்பன் வாங்கிக் கொடுத்ததுண்டா? எக்ளி பிஷன் என்று ஊரே திரண்டது! நீங்களோ, உங்கள் மருமாளுக்கு ஏதோ மஞ்சள் காமாலை யென்று, சோறும் தண்ணிரும் மறந்து அவள் படுக்கையண்டையே சுற்றிக் கொண்டிருந்தீர்கள். கட்டிய மனைவியைப் பற்றிக் கடுகள வேனும் சிந்தனையிருந்ததா? எனக்கும் குழந்தைகள் என்றால் இஷ்டம்தான்; இருந்தாலும், உலகத்திவில்லாத மருமாளா?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/117&oldid=870210" இலிருந்து மீள்விக்கப்பட்டது