பக்கம்:மீனோட்டம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை 蔓越了 குழந்தையென்றால் உடம்புக்கு வருவதில்லையா?. நான் என் வீட்டில் ரொம்பவும் செல்லமாய் வளர்ந்து விட்டேன். எனக்குக் கஷ்டம் என்று ஒன்றும் தெரியாது. எங்கள் வீட்டில் ரேடியோ உண்டு; எலெக்ட்ரித் விளக்கு உண்டு; நாங்கள் மாஸம் நாலு தடவை சினிமாவுக்குப் போவோம். உங்கள் வீட்டிலோ, ஏன் காரியங்கள் சுத்தமா இல்லை? ஏன் குங்குமமிட்டுக் கொள்ளவில்லை? ஏன் மஞ்சள் தேய்த்துக் கொள்ளவில்லை? ஏன் வாசலில் நிற்கிறாய்? ஏன் பகலில் தூங்குகிறாய்? என்றெல்லாம் என்னைத் கேட்கிறார் கள். முதன் முதலில், மணமாகி, சத்திரத்திலிருந்து நாம் உங்கள் வீட்டுள் நுழைந்து உங்கள் அம்மாவுக்கு நமஸ்காரம் பண்ணினபோது, உங்கள் தாய் என்னைப் பார்த்து, .அம்மா. நீதான் வீட்டுக்கு மூத்த நாட்டுப் பெண். இந்த வீட்டையும், நான் பெற்று முப்பது வருஷமாய் வளர்த்த பிள்ளையையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன்' என்று சொன்னபோதும், அப்போது கனிவுடன் என்னை நீங்கள் பார்த்த பொழுதும் எனக்கு எவ்வளவு பெருமையா இருந்தது தெரியுமா? ஆனால் முத்த நாட்டுப் பெண் என்றால் : அர்த்தம் என்ன என்று இப்பொழுதுதான் தெரிந்து கொண் டேன். நான் ஏமாற்றப்பட்டேன். நான் உங்களைக் கட்டிக் கொண்டேனேயொழிய, உங்கள் வீட்டாரைக் கட்டிக் கொள்ளவில்லை. என் தாய், என் குடும்பம், என் கடமை, என் பொறுப்பு என்றெல்லாம் சொல்விக் கொண்டும் பண்ணிக் கொண்டும் நீங்கள் என்னிடம் காட்டும் இம்மாதிரிப் ஆ எனக்கு வேண்டாம் என்று. நீங்கள் எனக்கேதான் என்று இருக்கப் போகிறீர்கள்? அப்போது போலேயே இப்பொழுதும் அவன் மண்டை யில் ஆவி பறந்தது. இவ்வளவு ஆத்திரத்தையும் வயிற்றில் வைத்துக் கொண்டா, தன் குழந்தையையும் தாங்கிக் கொண் டிருக்கிறாள்? இதென்ன சுய மூளையில்தான் இருக்கிறாளா? அவள் வாழ்க்கையே அவன் கையுள் அடங்கியிருப்பைதி யறியாமல், அல்லது அறிந்து தானோ அவன் வாழ்க்கையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/118&oldid=870211" இலிருந்து மீள்விக்கப்பட்டது