பக்கம்:மீனோட்டம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை 119 ஆவலாய் குழந்தை குழந்தை' என்றீர்கள். அதுதான் நமக்கிருக்கும் பிணைப்பு என்றீர்கள். இப்பொழுது எட்டியும் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். ஊர்க்குழந்தையை யெல்லாம் வாரியணைத்துக் கொஞ்சுவீர்கள். உங்கள் குழந் தையைக் கண்ணால்கூடக் காண வராமல் மனத்தைக் கல்லா யடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் இதை யெழுதுகையில், குழந்தை என் மடியில் படுத்துக் கொண்டு என்னைப் பெற்றதாலோ, என் தகப்பனாலோ என்ன சுகத்தைக் கண் டாய்?’ என்று கேலி செய்வதுபோல் பொக்கை வாயைத் திறந்து சிரிக்கிறது. துணி கிழிந்தால் ஒட்டுப் போடலாம்; ஆகாயம் கிழிந்து போனால் ஒட்டுப் போட முடியுமா?” பேஷ்? படிக்கும் நாவல்களும் பார்க்கும் சினிமாக்களும் ஏதோ இம்மாதிரி கடிதம் எழுதவாவது பயன்படு கின்றனவே!” இன்னொன்று, அவசர அவசரமாய்: "உங்கள் குழந்தைக்கு உடம்பு சரியாயில்லை. கொஞ்சம் அழுதால் கைகால் விறைத்துச் சில்லிட்டு நீலமாய்ப் போகிறது மூச்சு இழுத்துக் கொள்கிறது. உடலில் கோளா றில்லை. தெய்வ குற்றம் என்கிறார்கள். உங்களுக்கு அத்தோடு ஒட்டுதல் இல்லாவிட்டாலும், உங்கள் குலதெய்வத் தின் அருளுக்கு அதற்குப் பாத்யதை உண்டு. ஆகையினால் அம்மாவைக் கேட்டுக் கோவிலுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து கொண்டு உடனே வாருங்கள். நீங்கள் எனக்குச் சொன்னதையே உங்களுக்குத் திருப்பிச் சொல்கிறேன்; நம்மிருவருக்கும் தவிர்க்க முடியாத பந்தம் ஏற்பட்டு விட்டது. நாமிருவரும் தனியாயிருந்தால், நான் உங்களுக்குச் சரியாயில்லையா பாருங்கள். தனிக்குடித் தனத்துக்கு வருமானம் போதாதென்றால், ஒத்தாசை செய்ய என் வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெண் சுகமாகயிருக்க வேண்டுமென்பதைத் தவிர அவர்கள் என்ன விரும்புவார்கள்? உங்கள் தாயாருக்கு உங்களைத் தவிர இன்னும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்; ஆனால் எனக்கு நீங்கள் ஒருத்தர் தானிருக்கிறீர்கள்',...,,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/120&oldid=870217" இலிருந்து மீள்விக்கப்பட்டது