பக்கம்:மீனோட்டம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2s; மீனோட்டம் ஆகவே, அவள்தான் பெண்மையையும் மானவெட்கத் தையும் விட்டு விட்டாள் என்றால் என்னையும் எல்லாம் துறந்துவிடச் சொல்கிறாளாக்கும்!” இதற்கப்புறம் அவள் கடைசிக் கடிதம் வந்தது: “...சரி, நீங்கள் உலகத்தாரைப்போல் இல்லாத அக முடையான் என்று எனக்கு எப்பவோ தெரியுமாயினும் இப்பொழுது சந்தேகமறத் தெரிந்து விட்டது. நீங்கள் எல்லா ருக்கும் நல்லவராயிருக்கலாம்; ஆனால் எனக்கு மாத்திரம் நல்லவர் இல்லை. என் கண்ணிரும் வீண் போகாது. (பேஷ்! இனி, பயமுறுத்தலாக்கும்!) இப்படியே உங்களுக்கு இந்தப் பக்கம் திரும்புவதாய் உத்தேசமில்லையானால் நீங்கள் ஆசை யாய் வளர்க்கும் உங்கள் மருமாளையே மணம் புரிந்து கொண்டு செனக்கியமாயிருங்கள். உங்கள் இஷ்டப்படியும் உங்கள் வீட்டார் இஷ்டப்படியும் நடந்து கொள்வாள்'... இப்பொழுது அவனுக்கு ஒரே எண்ணந்தான் தோன்றி யது. அவன் குழந்தை இறந்துவிடாதா? அதனாலேயே அவன் பிள்ளைப் பாசத்தை வளர்த்து, அப்பாசத்தையே தன் சுயகாரிய சித்திக்காக அவன் நல்லுணர்வுகளைக் கொல்லும் ஈட்டியாயல்லவா, அவன் மார்புக்கு இலக்காய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்? யாதவ குலத்தை நாசம் செய்த உலக்கை போல், அவன் வித்தேதான் அவனை நாசம் செய்யப் போகிறதோ? அவன் வித்து விஷ மரத்தில் பூத்த ஒரே காரணத்தால் விஷ வித்தாயின், அவ்வித்து மரமாவதன்முன் அதை வதைத்து விடுதல் நலமல்லவா, தன் வித்து எனும் பாபமிருப்பினும் அதை மரமாய்த் துளிர்க்க விடும் பாபத்தைவிடப் பெரிதா?- ஆனால் அவன் என்ன? சாமியா?... 'அம்பி-அம்பி-” அம்மா அவசரமாய்க் கதவைத் தட்டுகிறாள். அவன் கதவைத் திறந்தான். அம்மாவின் முகம் சுண் ணாம்பாய் வெளுத்திருந்தது, அவனுக்குப் பகீரென்றது. 'என்னம்மா?’- அம்மா அசதியுடன் அறையுள் வந்து சுவரில் சாய்ந்தாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/121&oldid=870219" இலிருந்து மீள்விக்கப்பட்டது