பக்கம்:மீனோட்டம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை 12; "என்னமோ கேள்விப்படறேனேடா?” என்ன?” ‘'நீ எங்களை விட்டுப் பிரிஞ்சு அவர்களிடம் போக வில்லை என்னு உன் வேட்டாத்துலே ஏதோ பூஜையெல்லாம் பண்றாளாமேடா? நல்ல பூஜையில்லேடா-ஏதோ மாவு பொம்மை, கோழியெல்லாம் வெச்சிண்டு-' 'அம்மா, எல்லாம் வாழுகிற தினுசில் வாழாவிட்டால், நாலுபேர் நாலு விதமாய்த் தான் சொல்லுவார்கள். அதற்கு நாம் என்ன பண்ணுவது? "சொல்றவா சொல்றான்னா அதுக்குத் தகுந்தாப்போலே உன் உடம்பும் தேய்ஞ்சுண்டே வரதேடா! நீ எவ்வளவு ‘பீடாயிருக்கேன்னு நீ தெரிஞ்சுக்க மாட்டேன் என்கிறே. வைத்தியமும் பார்த்துக்கமாட்டேன் என்கிறே -” "நான் கல்லு மாதிரிதான் இருக்கிறேன். எல்லாம் இந்த வெய்யிலில் அலையறதுதான்.” 'அம்பி!-” அம்மா கண்ணில் நீர் தளும்பியது. * "στσάτσοι""" "அந்தக் காலமெல்லாம் மாமியார் படுத்தறதென்பா; இப்போ மருமகள் படுத்தற காலம் வந்திருக்கு. ஈசுவரி யெண்ணம், அவளே ஜயிக்கணும்னு இருந்தால், அவளே ஜயிச்சுட்டுப் போறாள்; நீ வேனுமானால், அவளோடு அவ ளிஷ்டப்படியே தனிக் குடித்தனம் பண்ணுவதானால் பண்ணு-’ - அவன் முகத்தில் சிவப்பு ஏறியது. வார்த்தைகளும் தொனியும் சற்றுக் கடுமையாகவே வந்தன. 'அம்மா ஊர் வாய்க்கு அஞ்சி நான் உங்களோடு இருப் பது உனக்கு இம்சையாக இருந்தால், என்னை வீட்டைவிட்டு வெளியே போ என்று சொல்; ஆனால் அவளிடம் போ என்று சொல்லாதே. அதற்கு உனக்கு உரிமைகூடக் கிடை யாது.” r அம்மா விக்கி விக்கி அழுதாள். ‘'நீ எங்கே இருந்தாலும்.அவளோடு தனியாயிருந்தா லும்சநீ செளக்கியமா இருக்கனும் என்கிற ஒரு எண்ணத் மீ-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/122&oldid=870221" இலிருந்து மீள்விக்கப்பட்டது