பக்கம்:மீனோட்டம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மீனோட்டம் தாண்டா-' அவன் மனைவியின் அழுத்தத்துக்கு அடங்கிப் போய். அவன் அவளுடன் தனிக் குடித்தனம் செய்வதானாலும், இனி அவனுக்கும் அவளுக்கும் எங்கிருந்தாலும் சரி, தனிமையென் பதே கிடையாது. அவர்களிடையில் சுவர் விழுந்தாய் விட்டது. முகத்தோடு முகம் சேர்த்து, உடலோடு உடல் புல்லி, எவ்வளவு நெருக்கமான-மூச்சுத் திணறும் ஆலிங் கனத்தில் இருந்தாலும் சரி, இடையில் அந்தச் சுவர் ஓங்கி, பயங்கரமாய்த் திமிர்த்துக்கொண்டு தான் நிற்கும். ஆசையும்;அந்தரங்கமும் அழிந்தபின்னர் எஞ்சி நிற்கும் கடமையை விடப் பயங்கரம் எது? 絮 翼 絮 "இன்று ஏன் அவள் நினைவு என்னை இப்படி உறுத்து கின்றது? புண்ணாய்ப் போன மனதை எண்ணி எண்ணி ஏன் ரணமாக்கிக் கொள்கிறேன்? என்னுள் எது இப்படி வதை படுகிறது? எதிலேயோ, என்னுள் ஏதோ தோற்றுவிட்டது. ஏன்? எண்ணி எண்ணி எத்தனை ஆயிரம் எண்ணங்கள் வீணாகின்றன? எண்ணாமல் தான் இருப்பது எப்படி? நான் தெய்வமா? ஆனால் நான் ஏன் மனிதனாகவும் இருக்க முடிவ தில்லை? என் உள்ளம் பெட்ரோமாக்ஸ் விளக்குத் திரி மாதிரி.நான் உணருகிறேன். தொட்டாலோ, பட்டாலோ பிசுபிசுத்துப் போகும்; அம்மாதிரி நான் உள்ளுக்கே உளுத் துப் போய்க் கொண்டிருக்கிறேன். ஏன்? இன்னும் எத்தனை ஏன்கள் என்னுள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. இத்தனை ஏன்களுக்கும் என்னால் பதில் சொல்லி மாள வில்லை.” ஏன்? X 咒 演 அந்தி வெய்யில் சாய்கையில் அவன் கால்கள் இழுத்துச் சென்றபடி அவன் நடந்து கொண்டிருந்தான். அவனுள் ளேயே மூழ்கிப் போயிருந்த அவன், விழித்து எழுந்து தன்னைச் சுற்றிப் பார்க்கையில், அவன் இருமருங்கும் எட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/123&oldid=870223" இலிருந்து மீள்விக்கப்பட்டது