பக்கம்:மீனோட்டம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f24 هٔBشertrنشستناس மாதிரி ஒண்னும் நடக்கிப் போறதில்லை. அவள் இப் போதைக்குத் திரும்பி வரமாட்டாள்-” - "நீ ஏன் அப்படி நினைக்கிறாய்?” அபசகுனம் போன்ற அவள் வார்த்தைகள் அவனுள் ஏதோ ஒரு தினுசான திகிலை விளைவித்தன. - - "ஏன்?-ஒரு தினுசாய் உதட்டைப் பிதுக்கினாள். ஏன் என்றால், நான் என்னத்தைச் சொல்ல? உங்கள் அன்பை யும் லட்சியங்களையும் அறிந்து கொள்ள அவளுக்குச் சக்தி யும் கிடையாது; இஷ்டமும் கிடையாது. அவளே ஒரு அரைமூளைக்கேஸ்! ... உங்களுக்குக் களைப்பாயிருக்கு என்று எனக்குத் தோண்றது. கொஞ்ச நேரம் உட்காரு Gorrupfro” 'உனக்கு அவசரமில்லையா?” எனக்கு இனி ஒரு விதமான அவசரமும் கிடையாது-’ என்று அவள் சிரித்தாள். வெறுப்பில் புளித்த சிரிப்பு. புல் தரையில் இருவரும் சற்று நேரம் மெளனமாய் உட் கார்ந்திருந்தனர். சாவித்திரி முகத்தை நோக்குகையில் அதில் இவ்வளவு அழகு எங்கிருந்து வந்தது என்று தெரிய வில்லை. மூக்கு, கண் எனத் தனித்தனியாய் நோக்குகையில் அவைகளுக்கு அழகே யில்லை. அவள் கண்ணில் சற்று விளக்குப் பார்வை என்று கூடச் சொல்லலாம். ஆயினும் முக்த்தில் ஒரு தனிக் கனிவு-களை உள்ளத்தின் வெளிச்சம் ஒளி வீசுவது போல். 'அன்புக்கும் நியாய்த்துக்கும் மிருகங்கள் கட்டுப்படும்; நாங்கள் மாட்டோம். ஏனென்றால், நாங்கள் பெண்கள்”மறுபடியும் அப்புகைச் சிரிப்பு அவளிடமிருந்து வெடிப்புடன் கிள்ம்பியது. எங்களுக்கே கொஞ்சம் பேய்க் குணம் உண்டு. எங்களுக்கு முன் யோசனை, பின் யோசனையெல் ல்ாம் சில சமயங்கள் இருக்காது. அந்தந்தச் சமயத்துக்கு என்ன சாதித்துக் கொள்ளுவோமோ அதுதான் கணக்கு...' அவன் புன்னகை புரிந்தான். 'ஏது உன் வர்க்கத்தைப் பற்றி உனக்கு இவ்வளவு நீல்ஸ் ஆபிப்பிராயம்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/125&oldid=870226" இலிருந்து மீள்விக்கப்பட்டது