பக்கம்:மீனோட்டம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை 127 "ஐயோ! பாம்பு’ என்று அம்மா கதறிண்டு கன்னத்தை, பிடிச்சுண்டு வெளியே ஒடி வந்தாள். கண் மூடிக் கண் திறக்கறதுக்குள் "ஜே ஜே"ன்னு கூடிப் போச்சு. உப்பைக் கொண்டா, மிளகைக் கொண்டா. மந்திரவாதியைக் கொண்டா என்று எல்லோரும் பறக்கறத்துக்குள்ளே மாமி யார் மடியில் படுததிண்டிருக்கிற அம்மாவுக்கு மயக்கம் போட ஆரம்பிச்சுடுத்து. . அப்போ பக்கத்தாத்திலேருந்து ஒரு பையன் ஒடி வத் தான். பதினெட்டு, இருபது வயதிருக்கும்; பட்டணத்தில் மெடிகல் காலேஜில் படித்துக் கொண்டிருப்பவன், வீவுக்கு ஊருக்கு வந்திருக்கான். சட்டென மண்டியிட்டு அம்மா கன்னத்தில் பாம்பு கடிச்ச இடத்தில் வாயை வெச்சு ரத்தத்தை உறிஞ்சி வெளியில் துப்பினான். இரண்டு..மூணு தடவை துப்பினான். அம்மா தப்பிச்சாள். அந்தப் பையனை மெச்சாதவாளே கிடையாது. எங்கப்பா ஊரிலிருந்து வந்தார். சமாசாரத் தைக் கேட்டார். அவர் உற்சாகமயில்லையாம். அவரே ஒரு தினுசாம். அம்மாவைப் பார்த்து, மூட்டையைக் கட் டிண்டு உங்காத்துக்குப் போயிடு’ என்று சொல்லி விட்டார். "என்னடா?’ என்றாள் என் பாட்டி, 'பாம்பு கடிச்சா விஷத்தை வாங்கறதுக்கு எவ்வளவோ வழியிருக்கு, அந்தக் காலிப்பயல் இவள் கன்னத்தைக் கடிச்சுத் தான் காப்பாத்தனுமாக்கும்! அவன் வந்ததே மொதக் கொண்டு இவள் ஒரு மாதிரியாத்தான் இருக்காகிராப்புத் தலையும் கோட்டும் சூட்டுமா நான் இருக்கேனா... சரி சரி; கட்டு நடையை...” எங்கப்பா பெரிய மூர்க்கனாம். உலகத்திலிருக்கும் கெட்ட குணங்கள் அத்தனையு முண்டு அவரிடம். ஆனால் மத்த வரிடம் ஒரு குறை காணச் சகிக்கமாட்டார். அடே, ஆபத் துக்குப் பாபமில்லை என்று என் பாட்டி எவ்வளவோ சொல் லிப் பார்த்தாச்சு; பயனில்லை, அம்மா பிறந்தகம் வந்து சேர்ந்து விட்டாள். இத்தனைக்கும் என் தாய் வீட்டில் கொஞ்சம் புசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/128&oldid=870232" இலிருந்து மீள்விக்கப்பட்டது